112. | யாவரும் புலமையின் ஏற்றம தோய்வுறின் | | தேவ ரேயெனச் சிறப்பது திறமே, |
| யாராக இருந்தாலும் வாக்குப்பலிதமுடைய புலமையின் சிறப்பை, அடையப் பெற்றால் அவர் கடவுளர்களுக்கு இணையாகப் போற்றப்படுதல் ஒருதலை என்றவாறு, | இவ்வாசிரியர் கல்வியையும்-அஃது இறையுணர்வோடு கூடியதாயின்-ஒரு தவம் என்றே கொள்பவர், எனவேதான் கல்வியால் சித்தி முத்திகளைப் பெறவேண்டும் என்கிறார், இக்கல்விக்கு ஏழை பணக்காரன், உயர்குலம் இழிகுலம், பதவி உள்ளவன் இல்லாதவன், ஆண் பெண் என்ற எந்தப் பாகுபாடும் இல்லை. சாதாரண உலகியற் கல்வியாற் சிறப்படைந்தவனே, “களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்; கடைநிலத்தோர் ஆயினும் கற்றறிந் தோரைத் தலைநிலத்து வைக்கப்படும்”1 எனப்படும்போது எண்ணிய எண்ணியாங் கெய்தும் திண்ணிய தெய்வப்புலவன் தெய்வமாகவே போற்றப்படுதல் உறுதி. இதே கருத்தை இவர் வேறோரிடத்தில், “எக்குலத்து எவர்ஆ னாலும் ஏன்றமா தவம்செய் வாரேல் திக்குணர் புகழ்ச்சி தோய்வார்”2 என்கிறார். இம் மேற்கோளில் திக்கு என்பது திக்குப் பாலகர்களுக்கு ஆகுபெயர். (754) | 113. | புலமைத் தொழிலின் புகழ்எலாம் புலவோர் | | தாமே அறிவது சரதம் ஆமே, |
| புலமையின் சிறப்பையெல்லாம் மற்றொரு புலவனால்தான் முற்றிலுமாக உணர முடியும் என்பது உண்மையாகும் என்றவாறு, | “புலம்மிக் கவரைப் புலமை தெரிதல் புலம்மிக் கவர்க்கே புலனாம்-நலம்மிக்க பூம்புனல் ஊர பொதுமக்கட்கு ஆகாதே; | |
|
|