பாம்புஅறியும் பாம்பின கால்”1 என்று முன்றுறை அரையனார் கூறியதும் இது. |
இந் நூற்பாவுடன் தொழில்நிலை என்னும் இப்பிரிவு நிறைவு பெறுகிறது. (755) |
|
இப்பிரிவில் தவிர்க்க முடியாத காரணங்களால் புலவர் இருவர்க்கிடையே போட்டி ஏற்பட்டுவிட்டால் அப்போட்டிக்கு நடுவராக இருப்பவர் எப்படி ஒழுக வேண்டும் என்பது சிறப்பாகவும், போட்டியாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பொதுவாகவும் கூறப்பட்டுள்ளது, நடுநிலை பற்றிய ஓரிரு பொதுக் கருத்துகளும் இதில் இடம்பெற்றுள்ளன, இப்பிரிவில் பத்து நூற்பாக்கள் உள்ளன. |
114. | சுருதியும் புலவோர் சொல்லே என்றிடல் | | நடுநிலை ஆம்என நவில்வார் பெரியோர், |
|
பிறரால் இயற்றப்படாமல் தாமே உண்டானவையாகக் கூறப்பெறும் மறைகளும் புலவர்களால் வெளியாக்கப்பட்டனவே ஆகும் என்று தெளிந்து கூறுபவர்கள் சான்றோராவர் என்றவாறு, |
இனி “நடுநிலை ஆம்எனப் பெரியோர் நவில்வார்” எனக் கூட்டினும் அமையும்., |
மறைகள் மனிதர்களால் இயற்றப்படாமல் தாமே தோன்றின என்பர், இதுபற்றியே வடமொழியில் அவை ‘அபௌருஷேயம்’ என வழஙகப்படும், இதற்கு மனிதர்களால் செய்யப்படாதவை என்ற பொருள். |
மறைகள் எப்படியோ ஒரு மனிதன் மூலமாகத்தான் மக்களினத்தை அடைந்திருக்கவேண்டும், அல்லது ஒரு கடவுளின் வழியாக என்றேனும் கொள்க, ஒரு வாய் கூற அதனைப் பல செவிகள் கேட்டுத்தான் நூலோ செய்தியோ பரவ முடியும், |
|