அறுவகையிலக்கணம்519
பரம்பொருள் ஒரு மனிதனை-அல்லது கடவுளரில் ஒருவரைக் கருவியாகக் கொண்டு உள்நின்று உணர்த்துகிறார் என்றே வைத்துக் கொள்வோம். இப்படி இறைவனால் உள்நின்று உணர்த்தப்பட்டதாலேயே கருவியாகிய அவர் முதலில் புலமை பெற்றுப் புலவர் ஆகிவிடுகிறார். உலகத்திற்கு எட்டுவது இறைவனின் செய்தியே எனினும் புலவரின் வாய்மொழியே,. இதுபற்றியே இவர் ஏழாமிலக்கணத்திலும் “வேதாமோ டாகமம் விரித்துஉரைத் தானும் புலவன்என்று உணராப் புல்லியர் பலரே”1 என்றார்,. “நாடா முதல்நான் மறைநான் முகன் நாவிற் பாடா” என்னும் தனிப்பாடல் கலைமகள் பிரமனின் நாவில் இருந்து மறைகளைக் கூறியதாக அமைந்திருத்தல் காண்க.
(756)
115,நன்றிடை தீதும் தீதிடை நன்மையும்
 ஒன்றுமாறு உணர்வோர் ஒவ்வோன் புலவனே,
எந்த ஒரு நல்ல பொருளிடத்தும் சில தீய பண்புகளும், எத்தகைய தீய பொருளிடத்தும் சில நல்ல குணங்களும் இயல்பாக விரவியே இருக்கும்., ஆனால் இதை உள்ளபடி உணர்வோர் ஒரு சில அறிஞரே என்றவாறு,
முற்றிலும் நல்ல பொருள் அல்லது மனிதர் என்றோ, அவ்வாறே அனைத்து வகையாலும் தீயபொருள் அல்லது மனிதர் என்றோ இல்லை, எங்கும் இரண்டும் விரவியே காணப்படும், இது பற்றியே,. “குணம்நாடிக் குற்றமும் நாடிஅவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்”2 என்றார் வள்ளுவப் பெருந்தகை,
116.இன்பமும் தெய்வமும் இடைநிலைப் பொருள்எனல்
 வன்புடைப் புலவர்தம் வாய்மொழி யாதே.
இந்நூற்பாவின் பொருள் ஐயமற விளங்கவில்லை,
(758)
117,தன்வழக்கு எதிர்த்தோன் தன்னாற் சிதையினும்
 ஆம்எனப் பகர்வான் அறிவுடைப் புலவனே,