ஒரு புலவன் மற்றெருவனோடு வாதம் புரியுங்கால் தன்னுடைய கருத்து தவறானது என மற்றோனால் ஐயமற நிரூபிக்கப்பட்டுவிட்டால் தன் தோல்வியை ஏற்றுக்கொள்பவனே நல்லறிஞனாவான் என்றவாறு, |
வாதத்தில் தோற்றபிறகும்-தன்கொள்கையைச் சரியானது எனநிலைநாட்ட முடியாத நிலையிலும்-போலித் தன்மானம் கருதி வீண்வாதம் செய்யாமல் பெருந்தன்மையோடு தோல்வியை ஒப்புக்கொள்வதே அறிவுடைமை என்கிறார், (759) |
118, | இகலிய புலவோர் இடைநிலைக் காரன் | | வஞ்சகம் பேசின் மதியமும் இரவியும் | | உள்ள காறும் நிரயத்து உழலுமே, |
|
வாதமிடுகின்ற இரு புலவர்களின் சொற்போருக்கு நடுவராக அமைந்த ஒருவன் இருதரப்பு வாதங்களையும் நடுநிலையில் நின்று சீர் தூக்கி வன்மை மென்மைகளை உணர்ந்து நியாயமான தீர்ப்பை வழங்காமல் தன் சொந்த வெறுப்பு விருப்புகளின் காரணமாக ஒருவனுக்குச் சாதகமாகச் சார்ந்து நின்றால் அவன் சூரியனும் சந்திரனும் நிலைபெற்று நிற்கும் நாள் வரையில் மீளா நரகத்து உழல்வான் என்றவாறு, |
“சமன்செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி”1 “வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரம் சொன்னார் மனை”2 என்றெல்லாம் ஆன்றோர் கூறியவை இதுவே, |
119, | பாட அறியார் படிப்பின் களிப்பால் | | நாலவர் புகழ்வது நண்ணிப் பொருங்கால் | | இடைவரும் புலவோன் இடியேறு என்ன | | நக்குமிக்கு இகழ்வது நலம்ஆம் அன்றே. |
|
சொந்தமாகக் கவிதை புனையும் ஆற்றல் இல்லாத இருவர் |
|