தாம் பழைய செய்யுட்களை நிறைய மனப்பாடம் செய்து வைத்திருக்கும் கருவத்தால், நாட்டில் உள்ள மக்களிடம் பாராட்டுப் பெறவேண்டும், என்னும் ஒரே காரணம் பற்றி வாதிடப் புகுந்தால் நடுவர்-அவர் படைப்பாற்றல் மிக்கவராக இருப்பதால்-அவ்விருவரையும் பரிகசித்து ஏளனம் செய்வதே சரி என்றவாறு, | படைப்பாற்றல் அற்றவர்களுக்கு வாதம் தேவையற்றது என்கிறார். இது இலக்கியப்புலமை ஒன்றற்கே பொருந்துமாகலின் தத்துவம், சோதிடம் போன்ற பிற துறைகளுக்காக இது கூறப்படவில்லை. இக்கருத்து மேல்வரும் நூற்பாக்களாலும் தெளிவாகிறது, (761) | 120, | வாதுக்கு ஆதரம் ஆகிய வண்ணமும் | | விருதுக்கு ஆதரம் ஆயவெண் பாவும் | | அறியாப் புலவருக்கு அமர்விளைந் திடுங்கால் | | அவ்விரு புலவரும் அறிந்த பாடல் | | தொகையில்ஒன்று உயர்வது குறித்துக் காட்டிப் | | பாடும் திறமையில் பழுதுபட் டோனை | | மற்றவன் புடைக்கச் செய்து மகிழ்வது | | தக்க பான்மைஎன்று உரைப்பது தரமே, |
| இரு புலவர்கள் வாதிட்டால் தோற்றவர் தம் காதை இழப்பதற்குச் சித்தமாக இருப்பது வண்ணத்தில எழும் வாதம் ஆகும். தோற்றவன் தான் அதுவரை பெற்றுள்ள சிறப்புப் பட்டங்கள் அனைத்தையும் விட்டுவிடவேண்டியது வெண்பாத் தோல்வியிலாம், வாதிடும் இருவரும் வண்ணமோ, வெண்பாவோ இயற்றத் தெரியாதவர்களாக இருப்பின், அவ்விருவருக்கும் புனையத் தெரிந்த ஒரு யாப்பில் பாடல்களை இயற்றச் சொல்லி, அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து எது சிறந்தது என்பதைக் காரணங்களோடு விளக்கித் தீர்ப்பு வழங்கிய பிறகு தோற்றவனை வென்றவன் அடிக்க வைத்து மனநிறைவைப் பெறுவது சரியான பண்பே என்றவாறு, | இரு புலவர்கள் வாதஞ்செய்தால் அப்போர் இருவராலும் நன்கு கையாளக்கூடிய யாப்பின் அடிப்படையிலேயே இருத்தல் |
|
|