புலமையிலக்கணம்522
வேண்டும். வெண்பா மிகக் கடினமானது; வண்ணம் மிகப்பலருக்கு அரிதினும் அரியது. இவை கைவந்த மேலோர் தம்முள் வாதிடும்போதுதான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மற்ற சமயத்தில் வாதிடுவோர் இருவரும் நன்கு அறிந்த ஒரு செய்யுள் வகையே தேர்ந்தெடுக்கப்படவேண்டும்., அப்போதுதான் வாதம் சமமாக அமையும்,
நடுவர் தன் விருப்பம் போலத் தீர்ப்பு வழங்கிவிடாமல் காரணத்தை விளக்கித் தெளிவுபடுத்த வேண்டும் என்பதை ஒன்று உயர்வது குறித்துக் காட்டி என்றார்.
15 முதல் 18- ஆம் நூற்றாண்டு வரையில் கவிஞர்களுக்குள் போட்டிகள் ஏற்பட்டபோது அவர்களில் வென்றவர் தோற்றவருக்கு உடலால் ஊறுசெய்தார் எனப்பல செவிவழிச் செய்திகள் உலவுகின்றன. இது படித்தத புலவர்களுக்கு ஏற்புடைய செயலாகத் தோன்றவில்லை., எனினும் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பும் முறையில் அச்செயலிலும் எந்த அளவு நடுநிலை தவறாத அறத்தைப் புகுத்த முடியுமோ அந்த அளவு கூறி இந்நூற்பாச் செய்தார், மற்றவர்களுக்கு எந்த நிலையிலும் எந்தக் காரணத்தாலும் தீமை செய்யக் கூடாது என்பதே இவர் சொந்தக் கருத்து,
(762)
121,வெண்பாத் தோல்வியில் விருது இழப்பதுவும்
 வண்ணத் தோல்வியில் வார்செவி இழப்பதும்
 பழமை யாம்எனல் பல்லோர் வழக்கே.
வெண்பாவின் அடிப்படையில் ஏற்பட்ட போட்டியில் தோல்வியடைந்த புலவன் தான் அதுவரை பெற்றிருந்த சிறப்புப் பட்டங்கள், பல்லக்கு முதலிய விருதுகள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும், அதேபோல வண்ணப் போட்டியில் ஒருவன் தோல்வியுற்றால் அவன் காதுகள் அரியப்பட்டுவிடும், இது பண்டைய மரபு எனப் பலர் கூறுவர் என்றவாறு,
காது கொய்தல் பற்றி இந்நூல் 684, 685 நூற்பா உரைகளில் கூறப்பட்ட செய்திகளை இங்கும் இணைத்துக் காண்க.