அறுவகையிலக்கணம்523
122,தேமாங் கனிஉறழ் செழுந்தமிழ்ப் புலமையைச்
 சுண்டைக் காய்நிகர் சுவையுடைப் புலமையும்
 வெல்லும்; நடுநிலை விளக்கம் காணாப்
 புல்லிய புலவோர் பொருந்துஅவை யிடத்தே,.
உண்மையான நடுநிலையில் நில்லாது இழிகுணம் மிக்க புலவர்கள் தீர்ப்பு வழங்குபவர்களாக அமைந்துள்ள ஒரு மன்றத்தில் இனிய மாம்பழம் போன்று சிறந்து விளங்கும் நற்றமிழ்க் கல்வியை அளவால் மிகச் சிறியதும் சுவையால் கசந்ததுமாகிய சுண்டைக் காயைப் போன்ற புல்லறிவும் வென்றதாகப் பெயர் பெற்றுவிட முடியும் என்றவாறு,
“பொருட்குவை, குலத்து உயர்வு, அரசு, பூண், உடை, பட்டம் ஆகியபற்றிப் புலமைக்கு உயர்ச்சி கூறலும் ஒவ்வாமுறையே1” “இகலிய புலவோர் இடைநிலைக்காரன் வஞ்சகம் பேசின் மதியமும் இரவியும் உள்ளகாறும் நிரயத்து உழலுமே”2 என நடுவருக்கு நேர்மை எவ்வளவு இன்றியமையாதது என முற்கூறப்பட்டது. என்றாலும் சில சமயங்களில் நடுவர்களிடத்தில் நேர்மை இருப்பதில்லை. இந்நிலையின் விளைவை இந்நூற்பா சுட்டிக்காட்டுகிறது.
திருவிளையாடற் புராணம் இசைவாது வென்ற படலத்தில் இத்தகைய ஒரு நிலையைக் காண்கிறோம், பத்திரனின் மனைவிக்கும் இலங்கைப்பாடினிக்கும் இடையே வாதம் ஏற்பட்டபோது, அரசன் இலங்கைப்பாடினியின் சார்பாக இருக்கிறான் என்பதை உணராத அவையினர் நடுநிலையில் நின்று பத்திரன் மனைவியின் பாட்டைப் புகழ்கின்றனர், பிறகு அரசனின் கருத்தறிந்து கட்சி மாறுகின்றனர், “அரசன் உட்கிடை அறிந்திலர் அவைக்களத்து உள்ளார் விரைசெய் வார்குழல் பாடினி பாடலை வியந்தார்; புரைசை மானிரைப் பூழியன் இலங்கையிற் போந்த வரைசெய் குங்குமக் கொங்கையாள் பாடலை மகிழ்ந்தான்.”3 “தென்னவன் உட்கோள் எல்லை தெரிந்தனர்