அறுவகையிலக்கணம்527
தேவாரத்தின் பெரும்பகுதி அழிந்துவிட்டமை திருமுறைகண்ட புராணத்தால் தெரிய வருகிறது. இறைவனே, “வேதச்சைவநெறித் தலைவர்எனும் மூவர் பாடல் வேய்ந்தனபோல் மண்மூடச் செய்தே இன்று வேண்டுவன வைத்தோம் என்று உலகில் உள்ள மாந்தரொடு மன்னவரும் கேட்கு மாற்றால்”1 கூறி விட்டதால் மறுபடியும் அவரைத் தேவாரப் பதிகங்களை முழுவதும் தந்தருள்க என இறைஞ்சுவது முறையாகாது எனக் கருதல் வேண்டா என்கிறார்,
(768)
127,அருணை யூரன் அன்று ஆழியிற் சிதறும்
 பனுவலை முற்றும் பார்ப்போன் யாமும்
 குகவேள் அடிமை என்று கூறித்
 திருத்தகு புலமை செய்வார் தம்மில்
 சீரி யோர்எனச் செப்பிடல் இசைவே,
முற்காலத்தில் அருணகிரிநாதர் கடலில் எறிந்துவிட்ட சுவடிகளில் இடம்பெற்ற திருப்புகழ்ப் பாக்களையும் சேர்த்து அதனை முழுமையாகக் காண்பவனே முருகனடியார்கள் என்ற பெயர் தாங்கிப் புலமையோடு திகழ்பவர்களுக்குள் சிறந்தவர் ஆவர் எனக் கூறுதல் பொருத்தமுடைத்தாம் என்றவாறு.
அருணகிரிநாதர் மொத்தம் “ஆறுஆறுஆ யிரம் திருப்புகழும்வகுப்புஎண் நான்குடன்அந் தாதி ஒன்றும் வீறார்வேல் சேவன்மயில் களைப்புகழ்ந்த விருத்தமுமுன் விளம்பி மேனி வேறாய பின்கந்தன் அலங்காரம் அநுபூதி விளக்கிச் சில் பாட்டு”2இயற்றியதாகக் கூறுவர். திருப்புகழ் முழுவதையும் ஒருமுறை பாடம் செய்தவருக்கும் தன்னைப்போலவே அருள் புரிய வேண்டுமென அருணகிரிநாதர் வேண்டச் செவ்வேள் இசையாததால், “சிந்துஎனும் கடலில் தன்கைத் திருப்புகழ் முழுதும் சிந்தி நொந்துஎரி மனத்தன் ஆகி நுவலும்மேற் றிசையை நோக்கி இந்துஎனும் தவள நீற்றான் இலஞ்சியம் பதியில் சேர்ந்தான் நந்துஎறி அலைபல் வாறா நல்கிட உலகர்