(இந்நூலாசிரியனாகிய) யான் முருகப்பெருமான்மீது கொண்ட ஊடல் காரணமாகக் கடல் முதலிய நீர்நிலைகளிலும் தீயிலும் இட்டழித்த என்னுடைய படைப்புகளையும் மீட்டுத் தரவல்ல புலவர் யாரோ அவர் என் வணக்கத்திற்கு உரியவர் என்றவாறு, |
இவர் தாம் இயற்றிய கவிதைகள் அடங்கிய சுவடிகள் பலவற்றைத் தாமே அழித்து விட்டதை இந்நூற் சிறப்புப் பாயிரத்தும் (செய்யுள் 5) கூறினார். தேவாரம், திருப்புகழ்ப் பாக்களைப் போலவே தன்னாலேயே அழிந்த தன் நூல்களும் மீளவேண்டும் என விழைகிறார். இந்த நூல்களை இவர் குறிப்பிடுவதை மறைந்துபோன ஆயிரக்கணக்கான மற்ற நூல்களுக்கும் உபலட்சணமாகக் கொள்ளலாம். (771) |
130, | கொலைபுலை எனும்இரு கோதும் கொதுகுறழ் | | சிறிதும் இன்றித் தீர்தரப் புலமை | | நடவு வானை நரன்எனற்கு இசையாப் | | புந்தி யாளரும் பூதலத்து உளரே, |
|
பிற உயிர்களைக் கொல்லல், புலால் உண்ணல் எனப்படும் இரு பெரிய பாவங்களும் இந்நிலவுலகில் ஒரு கொசுவளவு கூட மீதமில்லாமல் முற்றிலும் அழிந்தொழியும்படித் தன் புலமை ஆற்றலால் செய்பவனைக் கடவுளுக்கு இணையானவன் எனக்கூறும் கருணைமிக்க அறிஞர்களும் இருப்பர் என்றவாறு. |
“நரன் எனற்கு இசையா” என்றதால் கடவுள் என்பது பெறப்பட்டது. “கல்விப் பெரும்பயன் கருணை என்னும் நல்விற்பனனே நாவலர்க்கு இறையே”1 என்பார் இவர். எதிர்காலத்தில் இத்தகையதோர் புலவன் தோன்றவேண்டும் என்னும் தம் ஆழமான ஆசையை இந் நூற்பாவில் வெளியிடுகிறார். இக்கருத்து இவரால் “எந்தநலம் இல்லார் எனினும் இரக்கம் என்னும் செந்தகைஒன்று எய்தில்அவர் தேவர்க்கும் முந்தறிஞர் என்னத் தெளிந்தோன் எவனோ அவன்கொடுங்கோன் |
|