புலமையிலக்கணம்530
மன்னர்க்கு எமன்ஆகு வான்”1 என வேறோரிடத்தும் கூறப்பட்டுள்ளது,
(772)
131,கருதிய தெய்வமும் கருமமும் கண்எதிர்
 காணார் புலமையைக் கண்டும் கயவர்
 அஞ்சத் திகழ்நலத்து அவாவுறல் உயர்வே.
தான் தரிசிக்க விழையும் கடவுள் விழிமுன் தோன்றிக் காட்சி அளிக்காததையும், தான் சாதிக்க விரும்பிய செயலை அவ்வாறே செய்து முடிக்க இயலாமையையும் உடைய பேரறிஞர்களின் புலமையைக் கண்கூடாகக் கண்டுவருகின்ற போதிலும், இறையருளைப் பெற்றுத் தீயவர்களை ஒடுக்குவதற்கேற்ற புலமையைப் பெற விழைதல் சிறப்பானதே யாகும் என்றவாறு.
பெரும் புலமை பெற்ற எவரும் தம் வழிபடு கடவுளைத் தம் ஊனக்கண்ணால் கண்டு பேசியதாகவோ அல்லது தம் வாக்குப் பலிதத்தால் செயற்கரிய செயல்களைச் சாதித்துக் காட்டியதாகவோ நாம் நம் காட்சி அளவையால் கண்டிலோம். எனவே இத்தகைய முயற்சி பயனுடையதாக முடியுமா என்னும் ஐயம் தோன்றுதல் இயல்பே. இத்தகைய ஐயமுற்றோர்க்கு அறிவுறுத்துவான் வேண்டி எழுந்தது இச்சூத்திரம்.
நாம் இத்தகைய செயல்களைக் காட்சி அளவையால் நேரில் அறிய முடியாவிடினும் ஆன்றோர் சொல்லாம் ஆகமப் பிரமாணம் இத்தகைய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன எனக் கூறுகிறது. அதனைப் பொய்யென வெறுத்து உதறாமல் உண்மையென நம்பி உறுதியுடன் முயல்வதே அறிஞர்க்குச் சிறப்பு என்கிறார்,
(773)
132.எதரிடுங் கருமத்து இயல்புஅறிந்து அதற்குத்
 தக்கவாறு இயற்றத் தகும்பே ரறிவுடைப்
 புலவரை அநுதினம் புகழ்வது கடனே.