தனக்கு நேரிடடுள்ள ஒரு காரியத்தின் தன்மையைத் தெளிவாக உணர்ந்து அச்செயலில் வெற்றி பெறுவதற்கு ஏற்றவண்ணம் சரியாகச் செயல்படுகின்ற பேரறிஞர்களை எப்போதும் போற்றவேண்டும் என்றவாறு, | தனக்குத் தோன்றியுள்ள பிரச்சினை, இடம், பொருள், ஏவல், காலம், தன்வலி, மாற்றான்வலி ஆகியவற்றை முதலில் ஐயந்திரிபறத் தெரிந்து கொள்ள வேண்டும், அடுத்ததாக அப்பிரச்சினைக்குத் தீர்வு காண எத்தைகய அணுகுமுறையைக் கையாளவேண்டும் எனவும் அதன் பின்விளைவுகள் எதுவாக இருக்கக்கூடும் எனவும், சிந்தித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்., இத்தனைக்கும் பிறகு சரியான இடத்தில், சரியான காலத்தில், சரியான முறையில் தவறின்றித் துணிந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் உறுதியாக வெற்றிகிட்டும், இவற்றைத் தெளிவாக உணரப் பேரறிவின் துணை இன்றியமையாதது. இத்தனையையும் உள்ளடக்கி, “கருமத்து இயல்பறிந்து அதற்குத் தக்கவாறியற்றத் தகும் பேரறிவு” என்றார். திருக்குறள் இவற்றை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விரித்து உரைக்கும். (774) | 133, | மூன்றாம் நிலைஇவண் மொழிந்தனம்; முதல்வன் | | அருள்நிலை கூறுதும் அறிவுறும் பொருட்டே, |
| செயல்வகை இயல்பின் மூன்றாம் பிரிவாகிய எதிர்நிலையை இவ்வாறு கூறிமுடித்தோம். மாணவர்கள் நல்லறிவு பெறுவதற்காக அடுத்துப் பரம்பொருளின் அருள்நிலையைக் கூறுவாம் என்றவாறு, | இந்நூற்பாவோடு இப்பிரிவு நிறைவேற்றப்பட்டு அடுத்த பிரிவிற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்படுகிறது. (775) | |
முற்காலத்தில் புலவர்களிடையே திருவருள் எவ்வாறு விளையாடியுள்ளது என்று இப்பிரிவில் கூறுகிறார், இங்கும் மரபியல்பில் கூறப்பட்டவாறே பல வரலாற்றுச் செய்திகள் |
|
|