அறுவகையிலக்கணம்533
என எண்ணலாகாது, இவரைப்பற்றிப் புலவர் புராணத்தில் கூறுங்கால், “வரைதொறும் நடம்செய் வானை வழிபடும் அருணை நாதன் கரையில்சித் திரமாச் சொல்லும் கந்தன்அந் தாதிப் பாடற்கு உரைஉடன் அவன்சொல் மாட்சி ஒண்டமிழ்ப் புலவர் ஓர்வார்; திரைஉறு கரிய சிந்தைச் சிறியவர் தேறிடாரே”1 எனவே கூறுகின்றார்.
அருணகிரியாரிடத்தில் வில்லிபுத்தூரார் தோற்றது தம் புலமைக் குறையாலன்று; ஆனால் சற்றும் கருணையின்றிப் பல புலவர்களின் செவிகளை அறுத்த பாவத்தால்தான் என்ற கருத்தை, “அந்தகன்போற் பற்பலர்காது அறுத்த பாவம் அமைந்தது இந்நாள் எனக்கு எனச்சொற்று ஆண்மை தீர்ந்தான்”2 எனவும் விளக்குகிறார்.
திருவருள் துணை இல்லாதபோது எவ்வளவு பெரியவர்களுக்கும் துன்பம் நேரலாம் என்பதற்குச் சான்றாகவே இந்நிகழ்ச்சியும் இப் பிரிவில் இடம்பெறும் வேறு சிலவும் கூறப்படுகின்றன.
(776)
135,அன்னம் கொடுத்தோன் அருமைக் குருந்தினைக்
 குத்திய கவிஞனுள் கோல்பாய்ந் ததுவே.
தனக்கு உணவு, உடை, உறையுள் முதலியவற்றை அளித்து அரசவையில் சிறப்பும் கொடுத்திருந்த சோழ மன்னனின் ஒரே ஆண்மகவை, அக்குழந்தை ஒரு யானைக்கு அஞ்சி அருகில் நெருங்கும்போது தன் எழுத்தாணியால் குத்திக் கொன்ற கம்பநாடன் தன்னுடைய மார்பில் அம்பு பாய்ந்து இறந்தான் என்றவாறு,
கம்பனுடைய மகன் அம்பிகாபதி. சோழன் மகள் அமராவதி, இவர்களுக்கிடையே மலர்ந்த காதல் காரணமாக மன்னனால் அம்பிகாபதி கழுவேற்றப்பட்டான். இதனால் சினந்த கம்பர், “மத்தகவே ழத்தினுக்குப் பயந்துதன்பால் வரும்அரசன்