புலமையிலக்கணம்534
மகனைக் கையில் வைத்தவெழுத் தாணியினால் கவியானைச் செயல்இதுஎன வதைத்திட் டானே”1 இதற்குப் பழிவாங்க, “பின்னும் மன்னன் தனக்கினிய சிற்பன்ஒரு வனைக்கொடுஒரு பெட்டி செய்து மின்னும் அம்பும் வில்லும் அதன் உள்ளமைத்துத் திறந்தாரை விரைந்து கொல்லும் என்னும்இயல் பினது ஆக்கித் திறத்திஎன்றான்; நடந்தஎலாம் எளிது தேற முன்நுவன்ற வாணிஎங்கோ மறைந்திட்டாள் வினைப்பயன்முற் றியதால் அந்தோ”2 “திறத்தலும் மார்பகத்தை உருவிப்போயது”3 என வழங்கும் கதையை நினைந்து கூறியது இந் நூற்பா.
கம்பநாடன், சோழன் இருவருக்கும் உண்மையாகவே பைத்தியம் பிடித்தால்கூட இவ்வளவு மோசமாக நடந்து கொள்ள மாட்டார்கள், பாமரர்கள் தத்தம் தகுதிக்கும் சுவைக்கும் ஏற்ப எப்படியெப்படியெல்லாம் பெரியோர்களின் வரலாற்றைத் திரிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
இந்நூற்பாவில் நாம் கருதவேண்டியது, “வாணிஎங்கோ மறைந்திட்டாள்; வினைப்பயன் முற்றியதால்” என்பது மட்டுமே, இங்குக் கம்பனின் தோல்வி கூறப்பட்டது.
(777)
136,மன்னவன் ஆணையை மறுத்துஓர் பாடல்
 சொன்னவன் கழுவில் துடித்துஇறந் தானே.
இன்பச்சுவை கலக்காமல் இறைவன்மீது நூறு பாடல் பாடுக என ஆணையிட்ட சோழன் கட்டளைக்கிணங்கப்பாடி வரும்போது அம்பிகாபதி நூறாவது பாடலாகச் “சற்றே பருத்த” எனத்தொடங்கும் சிற்றின்பப் பாடலைப் பாடியதால் அவன் கழுவேற்றப்பட்டு மாண்டொழிந்தான் என்றவாறு,
அம்பிகாபதி பற்றிய செவிவழிச் செய்திகளைப் புலவர் புராணம் கம்பர் சருக்கம் 112 முதல் 140 வரை அமைந்த கவிகளிற் காண்க. இந்த அம்பிகாபதிக்காக வாணி தெருவில்