அறுவகையிலக்கணம்535
கொட்டிக் கிழங்க விற்றாள்; பூவரச மரத்தடியில் பயறு அவிப்பவளாகக் காடசி தந்தாள் என்பர். ஆனால் அருள் விளக்கம் குன்றியபோது அதே அம்பிகாபதி கொல்லப்பட்டான். அத் திருவருள்நிலையைக் காட்டவே இந் நூற்பா இங்கு இடம் பெறகிறது.
(778)
137.கவிதை ஒன்றால் கதிரவன் குலத்து
 மன்னவர் அனைவரும் மாண்டனர் அன்றே.
(சோழனின் பொறிப்பெட்டிலிருந்து அம்பு பாய்ந்து இறக்கும் தருவாயிலிருந்த) கம்பநாடன் பாடிய ‘வில்லம்பு சொல்லம்பு’ என்ற வெண்பாவால் சூரியன் மரபாகிய சோழ மன்னர் அனைவரும் மாய்ந்தனர் என்றவாறு.
இவ்வரலாறு முன் காட்டப்பட்டது. இதில் இடம்பெற்ற கவிதை “வில்லம்பு சொல்லம்பு மேதினியில் ரெண்டுண்டு; வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்-வில்லம்பு பட்டதடா என்மார்பில்; பார்வேந்தா நின்குலத்தைச் சுட்டதடா என்வாயிற் சொல்”1 என்னும் வெண்பாவாகும்,
கம்பனுக்கு வாய்த்திருந்த தெய்வீக அருள் அச்சமயத்தில் அவன் உயிரைக் காக்காமல் கைவிட்டுவிட்டது; ஆனால் அதேசமயத்தில் அவன் இட்ட சாபம் நிசமாகியது, இதனால் திருவருளின் இயக்கம் எப்போது எப்படி இருக்குமென யாராலும் அறியமுடியாது என்பதை உணர்த்துவதே இந் நூற்பாவின் நோக்கம். இங்குக் கம்பன் பெற்றது முழுவெற்றி அன்று.
(779)
138,செத்து நாறிய சினைஆடு எழுந்து
 குட்டி ஈனிய கொள்கையும் பிறவும்
 ஆய அருள்நிலை அடைவதற்கு அரிதே.,
ஓர் இடையனிடமிருந்து வந்த சினை ஆட்டின் பிணம் ஒன்று உயிர்பெற்றெழுந்து இரு குட்டிகளைப் பெறுமாறு செய்த பேரருளும், தீமை கலவாத அதிசயச் செயல்களாகிய