அறுவகையிலக்கணம்537
விற்கொண்ட வாள்நுதலாள் வேலி தருங்கூலி நெற்கொண்டு போம்அளவும் நில்லாய் நெடுஞ்சுவரே”1 என்ற தனிப் பாடலை நினைந்து கூறியது இந்நூற்பா. இங்குத் திருவருள் துணையி்ன்மை கூறப்படுகிறது.
(782)
141.மூகை ஆய முருந்துஇள நகைச்சேய்
 பாகை நேர்தமிழ் படித்ததும் உளதே.
ஊமையாகப் பிறந்தவரும் மிக்க இளமையானவரும், புன்முறுவலுடையவரும் ஆகிய குமரகுருபரர் தம் முயற்சியே சற்றும் இல்லாமல் செந்திலாண்டவன் அருளால் தேன்பாகைப் போன்ற இனிய தமிழ்மழை பொழிந்ததும் உண்டு என்றவாறு,
குமரகுருபரர் வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று.
ஐந்தாண்டினர் என்பதற்காக முருந்து எனவும், ஊமையாக இருப்பது எத்தனை பெரிய துன்பம் என்பதைக்கூட அறியாதவராக இருந்தார் என்பதற்காக இளநகைச் சேய் எனவும் கூறினார். முன்னால் மரபியல்பிலும் இங்கு அருள்நிலையிலும் இடம்பெற்ற புலவர்களிடமெல்லாம் தம் முயற்சி, இறைவன் அருள் என்ற இரண்டையும் காண்கிறோம். சொந்த முயற்சியே-ஏன் எண்ணமே-இல்லாத சிலர்கூட அருளின் துணையால் மட்டுமே பெரும் புலமை பெற்றுள்ளனர் எனக் கூறித் தான் முன்கூறிய, “நூலின் துணையினும் நூறுபங்கு அதிகம் தெய்வத் துணையாம் செழுந்தமிழ்க் கவிக்கே”2 என்பதனை வலியுறுத்துவதுதான் இந்நூற்பாவின் நோக்கம், “நற்குஞ்சரக்கன்று நண்ணில் கலைஞானம் கற்கும் சரக்கு அன்று காண்”3 என்றார் பிறரும்.
(783)
142.வாதிடத் தேடி வரும்எழு மூவரும்
 பேசும்நா இன்றிப் பிணம்போல் இருக்கக்
 கண்டது அருள்எனக் கழறுதல் றையே.