புலமையிலக்கணம்538
இலங்கையில் இருந்து தில்லைக்கு வந்து அங்குள்ள சைவர்களை வாதத்தில் வென்று, திருக்கோயிலைத் தமதாக்கிக் கொள்ள விரும்பிய 21 புத்தபிக்குகளைத் தோற்கடித்து ஊமைகளாக்கிய மாணிக்கவாசகரின் வெற்றியையும் இறையருள் எனக் கொள்வதே சிறந்தது என்றவாறு,
(784)
143.தாய்வயிற்று இருந்து தரணியிற் பிறந்த
 உடன்சிலர் பாடிய வொள்ளிய தமிழும்
 பாரொடு வானில் பரந்தது அன்றே.
(பகவன் ஆதி என்னும் கணவன் மனைவியருக்குப் பிறந்த அவ்வை, உப்பை, அதிகன், உறுவை, கபிலர், வள்ளி, வள்ளுவர் என்ற எழுவரும்) தம் தாயின் அகட்டிலிருந்து வெளியேறி உலகில் தோன்றிய உடனே பாடிய சில கவிகளும் உலகிலும் வானிலும் பரவி உள்ளன என்றவாறு.
இச்சமயத்தில் இவ்வெழுவர் பாடியனவாக ஏழு கவிகள் தனிப்பாடல்களாக வழங்குகின்றன. “அளப்பரும் பனுவல் அகண்டம் ஆய நாத சத்தியின் நனந்தலை கிடந்து பகர்வார் வரவு பார்க்கின்றன”1 எனும் தம் கொள்கைக்கேற்ப வானில் பரந்தது என்றார். இதுவும் சொந்த முயற்சியின்றித் தானே வலிய வந்த திருவருட்புலமையைக் குறித்து நின்றது.
144.அருள்நிலை முடித்தற்கு ஆரால் ஆகும்என்று
 அஞ்சி இந்தமட்டு அடக்கிச் செயல்வகைக்
 குறிப்பொடு புலமை இலக்கணம் கூறிக்
 கருதிய பயனில் கருத்துஅமைந் ததுவே.
திருவருளின் செயலை இத்தன்மைத்து என அறுதியிட்டுக் கூறி முடித்தற்கு எளியேன் போன்ற யாரால் இயலும் என்னும் அச்சத்துடன் இப்பிரிவை இத்துடன் நிறுத்திக் கொள்வதுடன் செயல்வகை இயல்பு எனப் பெயர்பெற்ற இப்பெரும் பகுதியுடன் புலமை இலக்கணத்தை முடித்துக் கொண்டேன், என் பணி