அறுவகையிலக்கணம்539
முடிந்தது. இதனைக் கற்பார் இதன்வழி ஒழுகிக் கருணை மிகப்பெற்று மாதவம் முயன்று உலகிற்கு நலம் பயப்பதாகிய அருஞ்செயல்களைப் புரிந்து, பின் பிறவியின் முழுப்பயனாகிய வீட்டின்பத்தையும் அடைதல் வேண்டும். என்னும் எண்ணம் மேலோங்குகிறது என்றவாறு.
கருதிய பயன் என்பது இந்நூலாசிரியர் கொள்கைகட்கேற்ப விரித்துரைக்கப்பட்டது. இந் நூற்பயன் இவராலேயே முன்னர் பொதுப் பாயிரத்தின் ஆறாங்கவியில் கூறப்பட்டது., இந்நூற்பாவுடன் இப்பிரிவும், செயல்வகை இயல்பும், அறுவகை இலக்கண நூலும் நிறைவுபெறுகின்றன.
(786)
செயல்வகை இயல்பு முற்றும்,
புலமை இலக்கணம் முற்றும்.
ஆகச் சூத்திரம் 786
வண்ணச் சரபம், தண்டபாணி சுவாமிகள்
இயற்றிய
அறுவகை இலக்கணம் மூலமும்
புலவர், ப,வெ, நாகராசன் அவர்களின்உரையும் நிறைவேறின,