அறுவகையிலக்கணம்547
கட்டளைக் கலித்துறை
இலக்கிய ஐந்து முகன்அடி
    யார்ஐந்து இலக்கணங்கள்
  துலங்கவைத் தார்என்று அறியாமல்
    நான்முகன் தொண்டு கொண்டு
  கலங்குறு சாரணர் ஒத்துஉரைத்
    தார்; அயிற் கந்தன் அன்புஆம்
  நலம்கொள்எங் கோன்முறை கோடாதுஇவ்
    வாறு நவின்றனனே.
வண்ண விருத்தம்
தனதனாதந்த தனதனதனத்தன தன்னதானா
    தொழுதுவேலன்பொன் அடிமலர்களைத்தினம்
 
நண்ணும்மேலோர்
       துகள்இலாஐந்து கரமுறுகளிற்றிணை
 
எண்ணிவாழ்வோர்
    மழுவுளான்அன்பு பெருகியமனத்தினர்
 
கன்னியாயே
       வளரும்மாதங்கி முதலினர்தமைத்துதி
 
பண்ணும்வாயோர்
   குழுவெலாம்நம்பும் அறநெறிஎனத்திகழ்
 
தன்மையாலே
       குருஎனநின்ற பெரியவர்திருப்புகழ்
 
உண்மையாலே
    முழுநிலாவென்ற பொடியணிஉடற்கொளும்
 
வண்மையோனாம்
       முருகதாசன்றன் அறுவகைஇலக்கணம்
 
நன்மையாமே.
கோபாலசமுத்திரம் வித்துவான் சண்முகதாசப்பிள்ளை
அவர்கள் இயற்றியது
  தனதன தனத்ததன,,,,,,,,,,,,,,,தனனதன தானனா
 சிறுதடி பிடித்துடலம் முழுவதும் வெளுத்தபொடி
    திகழ்தரு சிறப்புடைய செழியகுரு நாதனே
 மறுவரு சகத்தில்ஒரு முரகரி எனப்பெரிய
    வளமது பெறக்கருணை வழியிலுறு மாதவா