| பூதலம் புகழும் பொதிய மால்வரைச் |
| | சீதவார் பொழிலில் செழுமுகில் பொழிந்த |
| | தெண்ணீர்ப் பெருக்கம் தேனொடு கலந்து |
| | வெண்ணீற்று அணிதிகழ் மேலோர் பலரும் |
| | பரவுசீர்க் குறுமுனி பயந்தமுத் தமிழ்என |
| | உரமொடு தொனித்துஆங்கு உறுபொருள் பலகவர்ந்து |
| | அம்மலைக்கு அணிந்த அணிஎன அவிர்வுற்று |
| | எம்மனோர் வழுத்தும் இயல்புடன் உலகில் |
| | பல்லுயிர் வளர்க்கும் பண்புறீஇ நடந்து |
| | தொல்லைமா கடலில் தோய்தரு பொருநைத் (10) |
| | திருநதி நடுவில் செம்பொற் கோவில் |
| | மருவிய உருமா மலைஅமர்ந்து அருளிய |
| | முழுதுணர் புலவன் மூவிரு முகத்தும் |
| | விழுமிய குறுநகை விளங்க விற்பனர் |
| | பெறுநலம் பலவும் பேணும் பெற்றியின் |
| | அறுவகை இலக்கணம் அருணை யூரன் |
| | அன்னோர் தேறும் அருந்திறல் திருப்புகழ் |
| | ஒன்னார் வெருளும் ஒண்பொருள் வண்ணம் |