சொல்லிலக்கணம்152
எய்யக்கோல் இல்லாமல் இச்சிச்சிச் என்றானே
வையக்கோ னார்தம் மகன்.1
மன்றலங் கோதை மலர்மலைந் தஃகுவஃ
கென்று திரியும் இடைமகனே-சென்று
மறியாட்டை யுண்ணாமை வன்கையால் வல்லே
அறியாயோ வண்ணாக்கு மாறு.2
இந்நூற்பாவால் சொல்லிலக்கணத்தின் இரண்டாம்இயல்பு ஆகிய பிரிவு இயல்பு நிறைவு சய்யப்பட்டு அடுத்ததாகிய சார்பியல்பிற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்படுகிறது.
(225)
III. சார்பியல்பு
இவ்வியலுள் சில விகுதிகள், அசை, சாரியை, போலி, உவமை, மங்கலம், யாப்பிலக்கண வாய்பாடு, புதுமொழியாக்கம் பற்றிய பல்வகைச் செய்திகள் கூறப்படும். இவை பெரும்பாலும் சொற்களைச் சார்ந்து வருதலால் சார்பியல்பு எனப்பட்டது. எழுத்திலக்கணத்தில் இடம்பெறவேண்டிய போலி, யாப்பிற்குரிய வாய்பாடுகள், பாட்டியல் கூறும் மங்கலச் சொல் போன்ற பலவும் இவ்வியல்பினுள் இடம் பெற்றுள்ளன. மங்கலச் சொல் என்பது ஒரு பனுவலின் முதற்சொல்லை வைத்துக்கொண்டு பார்ப்பது; ஆதலின் ஓரளவு அது இங்கு இருத்தல் அமைவுடைத்தாம். முன் இயல்பில் பலவகைச் சொற்களைச் கூறியவர் உவமைச்சொல்லை அங்கே கூறாமல் இங்கே ஏன் சொல்கிறார் என்பது விளங்கவில்லை. பொதுவாக இந்நூலின் அமைப்பு முறை சரியான இலக்கணக் கட்டுக்கோப்புடன் அமையாமல் உதிரிக் கருத்துகளின் தொகுப்பாகவே பற்பல இடங்களில் காணப்படுகிறது. இவ்வியல்பு 25 நூற்பாக்களைக் கொண்டு உட்பிரிவுகளின்றி விளங்குகிறது.
61.ஆன்அன் ஆள்அள் ஆம்அம் ஏன்ஏம்
 உம்ஓம் கின்ற கிறமுதல் பல்வகை