பைங்கூழ் களைகட்டதனொடு நேர்”1 “அச்சம் உடையார்க்கு அரண்இல்லை ஆங்குஇல்லை பொச்சாப்பு உடையார்க்கு நன்கு”2 “காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்”3 “செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித தீர்த்து”4 “ஓர்ந்துகண் ஓடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை”5 ஆகிய திருக்குறட் கருத்துகள் இதில் தொகுத்துக் கூறப்பட்டன. (636) |
104. | தேனீ யாம்எனச் சேர்த்த பொருளைக் | | காரியம் அறிந்து களிறுஎனச் சிதறல் | | வணிகர்ஏறு அன்னான் மாண்புஎனல் வழக்கே. |
|
தேனீ எப்படி ஒவ்வொரு மலரிலிருந்தும் சிறிது சிறிதாகத் தேனைச் சேகரித்து மிகுதியாகச் சேமித்து வைக்கிறதோ அவ்வாறு கொஞ்சங்கொஞ்சமாக ஈட்டி மிக அதிகமாகப் பொருளைச் சேர்த்து, அதனைத் தக்க நற்பணிகளுக்கு யானை தன் துதிக்கையால் நீரைப் பீச்சியடிப்பதுபோலச் செலவழிப்பது தான் வணிகர்களுக்குள் தலைசிறந்தவனுக்குச் சிறப்பு ஆகும் எனல் தொன்மையான வழக்காறு என்றவாறு. |
சிறு அளவு பொருளாயினும் ஈட்டுங்கால் இகழ்ச்சியின்றி ஊக்கத்துடன் சேர்க்கவேண்டும் என்பதும் அது நன்கு சேமிக்கப் படவும் வேண்டும் என்பதும் தேனீயின் உவமையால் தெளிவாகிறது. வழங்கும் முறையை விளக்க இவ்வாசிரியர் கூறும் புத்துவமை ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. |
வள்ளல்கள் சிலர் தங்கள் மனதிற்குப் பிடித்த கலைஞர்கள் அல்லது நிறுவனங்களுக்குத் தாராளமாகப் பொருளை வழங்கிக்கொண்டே இருப்பர். அவர்களுக்கு உண்மையாகத் தேவைகளே இல்லாதபோதும் கொடுத்து அவர்களை மேலும் செல்வர்களாக்குவர். ஆனால் அதே துறைகளில் |
|