அறுவகையிலக்கணம்319
தான: ஒரு நெடில் ஒரு குறில் இணைந்து வருதல், (காது)
முற்கூறியவற்றோடு மெல்லின அல்லது இடையினமெய் ஒன்று சேர்ந்து வருதல், (சூதர், பாதம்)
ஒரு நெடில், ஓர் இடையொற்று, ஒரு குறில் சேர்ந்து வருதல், (கேள்வி)
முற்கூறியவற்றோடு மெல்லின அல்லது இடையின ஒற்று ஒன்று அடுத்து வருதல், (சார்கண், கூர்முள்)
ஒரு நெடில், மெல்லோற்று ஒன்று மெல்லின அல்லது இடையினக் குறில் ஒன்று வருதல், (மான்மி, தேன்வி)
முன்கூறியதோடு ஈற்றில் ஒரு மெல்லின ஒற்றோ அல்லது இடையின ஒற்றோ சேர்ந்து வருதல், (மாண்மன், கூன்வில்)
தன்ன: ஒரு குறில், ஒரு மெல்லின மெய், மெல்லின அல்லது இடையின உயிர்மெய்க்குறில் ஒன்று சேர்ந்தது. (கண்ணி, மென்வி)
முற்கூறியதோடு ஈற்றில் மெல்லினம் அல்லது இடையின ஒற்று ஒன்று சேர்ந்து வருதல், (அண்ணன், பொன்வில்)
தய்ய: ஒரு குறில், இடையின ஒற்று, இடையின அல்லது வல்லினக் குறில் ஒன்று வருதல், (வள்ளி, செய்தி)
முற்கூறியதோடு இடையின அல்லது மெல்லின மெய்களில் ஒன்று சேர்ந்து வருதல், (வள்ளல், நெய்தல்)
இந்த எட்டு அலகுகளையும் நினைவிற் கொண்டு அடுத்த நூற்பாவைப் பார்க்க வேண்டும்
(487)
59.வல்லினம் பற்றித் தத்தவும், முன்பின்
 நீடலும் பிறக்கும்; மெல்லினம் புணர்ந்து
 தந்தவும்., நீட்சியும். தன்னவும் பயக்கும்;
 இடையினம் தய்ய இயங்கச் செய்யும்;
 தனவும் பெருக்கமும் பொதுப்பட வருமே.
வல்வொற்று மற்றும் வல்லின உயிர்மெய்யின் கூட்டினால் தத்தச் சந்தமும், அதன் முன் நீடல் ஆனாத்தச் சந்தமும்