|
நசநாலு
சாதிக்கும் எழுத்தும் தேவதையும்
|
|
|
12.
|
காலையன்
சந்திர னிந்திரன் கண்டன காவலர்க்கு
மாலையன் சேயரன் கண்டன மாமறை யோர்க்குநிதி
சாலைய னந்தகன் கண்டன ஆகும் வணிகருக்கு
வேலையன் கண்டன 1வேளாள ருக்கு 2விலக்கல்லவே. |
(உரை
I) எ - ன், எழுத்துரிமை யுணர்த்...........................று.
ப, ம, ய, ர, த, ந இவை ஆறும் அரசருக்கு, உயிர்
பன்னிரண்டும், ச, ஞ, ட, ண, க, ங என்னும் உயிர் மெய் ஆறும்
ஆகப் பதினெட்டு எழுத்தும் அந்தணருக்கு. ற, ன, ல, வ இவை
நான்கும் வணிகருக்கு. ழ, ள இவை இரண்டும் வோளாளருக்கு. உயிர்
மெய் பதினெட்டும் நான்கு சாதிக்குமாம், அடைவே கொள்க. இவை
தசாங்கத்தயல் வரையப் படாவெனவே, முன்பு நஞ்செழுத்தென்று
பொது வகையாலே விலக்குண்டனவற்றை இம் முறையால்
வந்தன வரையார் என, அவற்றுள் சிறுபான்மையால் வருக எ - று.
(உரை II).
எ - து................நான்கு சாதிக்கும் எழுத்துக்களும்
தேவதைகளும் ஆமாறுணர்த்................று.
உயிர் பன்னிரண்டும், க, ங, ச, ஞ, ட, ண என்று
ஆறெழுத்தும் ஆகப் பதினெட்டெழுத்தும் பிராமணருக்கு உரியன.
இவர்க்குத் தேவதை அயனும் அரியும் அரனும் ஆறுமுகக் கடவுளும்
காக்கவென்று பாடுக. த, ந, ப, ம,ய, ர, என்னும் ஆறெழுத்தும்
க்ஷத்திரியருக்கு உரியன. இவர்களுக்குப் பிரபந்தம் பாடுமிடத்து
முதற்சீர்க்கண் இந்த எழுத்து வைக்க. இவர்களுக்குத் தேவதை
இந்திரன், சூரியன், சந்திரனும் காக்கவென்று பாடுக. ல, வ, ற, ன
என்னும் நாலெழுத்தும் வைசியர்க்கு உரியன. இவர் மேற் பிரபந்த
முதற் சீர்க்கு இந்த எழுத்து வைத்துப் பாடுக. இவர்களுக்குத்
தேவதை குபேரனும் யமராசனும் காக்கவென்று பாடுக. ழ, ள
என்னும் இந்த இரண்டெழுத்தும் வேளாளர்க்கு உரியன.
இவர்களுக்குத் தேவதை வருணன் காக்கவென்று பாடுக.
(கு - ரை). காலையன் - பகலைச் செய்யும்
சூரியன்; காலை
சூழ் செங்கதிர் (தக்க. 279). கண்டன - படைத்த எழுத்துக்கள்.
விலக்கல்ல என்பதை, காவலர்க்கு முதலிய நான்கனொடும்
கூட்டிக்கொள்க. மாலையன் - மாலயன்; மாலும் அயனும்; எதுகை
நோக்கி ஐகார மாயிற்று. நிதிசால் ஐயன் - நிதிகள் நிரம்பிய
தலைவன்; குபேரன். வேலையன் - கடலுக்குத் தலைவனாகிய
வருணன். (12)
(பி
- ம்.) 1 வெள்ளாளருக்கு 2 விலக்கில்லையே
|