இதுவுமது
   
14. ஏனைக் குகர முதலிரண் டுந்திரு வாதிரையாம்
1ஆன வவற்றி னடைவொரு மூன்றும் புனர்ப்பூசமாய்ப்
போனபின் நின்றன மூன்றெழுத் தும்பூசம் என்பபொய்யா
வானக் கருங்குழல் வம்பார் வனமுலை வாணுதலே.

     (உரை I).
எ - ன், கு, கூ என இவை இரண்டும் திருவாதிரை;
கெ, கே,கை இவை மூன்றும் புனர்பூசம்; கொ, கோ, கௌ இவை
மூன்றும் பூசம் எ - று.

     (பி-ம்.) 1‘போனற் கெகர முதன்மூன்று மேர்புனர்ப் பூசமென்ப
           தானக் கொகர முதன் மூன்றும் பூச மெனத்தகைவர்’
(14)