|   | 
           
             இதுவுமது 
           | 
         
         
          |   | 
            | 
         
         
          | 16. | 
          ஓதுந் 
            தகர 1வுயிர்மெய் யிரண்டேழு மூன்றடைவே 
            சோதி விசாகம் சதயமு மாமென் றொடர்நகர 
            ஆதியி லாறு மனுடமல் லாதன ஆறெழுத்தும் 
            ஏதமில் கேட்டைபூ ரட்டாதி யான இருவகையே. | 
         
       
            
           (உரை I).எ 
      - ன், த, தா இவை இரண்டும் சோதி, தி, தீ, து,  
      தூ, தெ, தே, தை இவை ஏழும் விசாகம். தொ, தோ, தௌ இவை  
      மூன்றும் சதயம். ந, நா, நி, நீ, நு, நூ இவை ஆறும் அனுடம். நெ,  
      நே, நை இவை மூன்றும் கேட்டை. நொ, நோ, நௌ இவை மூன்றும் 
      பூரட்டாதி எ - று. 
       
           (கு - ரை.) சோதி - சுவாதி. 
       
           (பி - ம்.) 1வுயிரிரண்டேழுடன் 
      (16) 
   |  
 
	
				
				 | 
				 
			 
			 |