தீக்கணம்
   
23. நிரையிரண் டாய்ப்பின்பு நேரிறி னந்த்ரம் நேரிரண்டாய்
நிரையிறின் மாருதம் நேர்நடு 1வாகி நிரையிருபால்
விரைதரு கோதைவெந் தீக்கணம் நேரிரண் டின்னடுவே
நிரைவரு மாயிற் 2பருதியிந் நாற்கணம் 3நீக்கினரே.

     (உரை I.) எ - ன், தீக்கணமாமாறுணர்த் ............ று.

     (இ - ள்.) முறையாற் கண்டுகொள்க. இந்நான்கு சீரும்
தீதாக்கும். இவற்றான் முதற்சீர் மொழியலாகாது.

  “எண்வ கைக்குறி யியலுமச் சீர்களுள்
வருணற் குரிய நாளே சதையம்
இயமானற் குரிய நாளே பரணி
சந்திரன் வந்த நாளே மகயிரம்
பூமி தேவிநாள் கேட்டை யாகும்
எஞ்சிய சீரீ ரிரண்டி னுள்ளும்
வஞ்சமில் மாருத நாளே சோதி
எரிநாள் கார்த்திகை யந்தர மதனுக்
குரிய நாளே யோண மாகும்
சூரியன் நாளே புனர்பூ சம்மே”

என்பது இந்திரகாளியம்.

“நிலையிற் குலைத்தல் செல்வ நீக்குதல்
கொலையிற் பிணியிற் கூட்டுவன வவையே.”

     (உரை II), எ - ன், முதற் சீரில் வைக்கலாகாத கணம்
உணர்த்........று.

     முன் நிரையசையாய் இரண்டு வந்து பின்பு நேரசையாகில்,
அந்தரகணமென்று சொல்லப்படும். முன் நேரசை இரண்டாய்ப் பின்பு
நிரைவரில் மாருத கணமென்று சொல்லப்படும். நேர்நடுவாகி
நிரையசை இருபால் வரில் அக்கினி கணமென்று சொல்லப்படும்.
முன்னும் பின்னும் நேர்வந்து நடு நிரைவரில் சூரியகணமென்று
சொல்லப்படும். இந்த நாலு கணமும் பிரபந்த முதற்சீர்க்கண்
வைத்தலாகாது. வைப்பின் பாட்டுடைத் தலைவனுக்கு, “நிலையிற்
குலைதல்..........கூட்டுவதாகும்.”

     ஒருவர்மேற் பாடும் பிரபந்தத்துக்கு இந்தப் பத்துவகைப்
பொருத்தமும் நன்றாக ஆராய்ந்து பார்த்து முதற்சீர் மங்கல
மொழியில் வைத்துப் பாடுக.

     (கு - ரை.) இயமானன் - இந்திரகணம் ; இதனைத்
துறக்கமென்றும் இயமானனென்றும் கூறுவர் ; வெண்பாப். 1. 20,
உரை. கருவிளங்காய் - அந்தரகணம். தேமாங்கனி - மாருதகணம்.
புளிமாங்கனி - அக்கினிகணம். கூவிளங்காய் - சூரியகணம்.


     (பி - ம்.) 1 ‘வாக’ 2 ‘பரிதி’ 3 ‘நீக்குவரே’ (23)