தசாங்கம்
   
24. +மலையாறு நாடூர் மலர்த்தார் வயப்பரி வார்மதத்த
கொலையார் களிறு கொடிமுர சாணை குலவுபத்தும்
தலையான நூலோர் தசாங்கம தென்ப தமதயலே
கொலையான சொற்பொரு டோன்றிடி லானந்தம் கூறுவரே.

     (உரை I). எ - ன், தசாங்கம் இவையென்றும், அவற்றின்
அயற்கண் நிற்கத் தகாதன இவையென்றும் உணர்த்......று.

     மலை............ஆணை இவை பத்தும் தசாங்கமாவன. இவை ஒரு
குரிசிற்குரிய பொருள். தன்னைப் பரிசிலன் பரவுங்கால் அவற்றின்
அயல் கொலை முதலாகிய கொடுமைச் சொல்லும் பொருளும்
அடுத்துக் கூறில் ஆனந்தம் எ - று.

     இவை இலக்கணம் இனமாகப் பாடும் அவையிற்றுக்கு
இயல்பல்ல; அல்லாதவையிற்றுக்கு ஆமென்று கொள்க. (24)

     (உரை II).‘இனி யொரு பிரபந்தம் பாடுமிடத்துத் தசாங்க
வருணனையும் பாடவேண்டும். அது வருமாறு ’