|
இதுவுமது
|
|
|
27. |
+விரிசடைப்
பிஞ்ஞகன் வேய்த்தோ ளெழுவர்முன்
காக்கவென்ன
அருள்பெறக் கூறி னவரவர் செய்யும் கொலையகற்றி
உரியநற் கங்கை யுமையாள் மதியூர் விடைகடுக்கை
விரைமலர் தார்மற்று மங்கல மாக விளம்பினரே. |
(உரை
I). எ - ன், இதுவும் காப்பு முதலே இருக்கும் கடவுளர்
ஆமாறுணர்த்...........று.
(இ - ள்.) செஞ்சடைப் பிஞ்ஞகனையும்
எழுவர்
மாதர்களையும் காப்புக்கு முதலாக்காது, கொலையும் கூறாது,
கங்கையையும் உமாதேவியையும் மதியையும் (விடையையும்)
கொன்றையையும் குலவ எடுத்து மங்கலமாகக் கூறுதல் வேண்டும்
எ - று.
(கு - ரை) எழுவர் - சத்தமாதர் ;
அபிராமி, நாராயணி,
இந்திராணி, கௌமாரி. வாராகி, துர்க்கை, காளி என்பார். காப்புக்கு
முதலெடுக்குங் கடவுள்திருமால் என்று முன்பு குறித்தலால், இங்கே
செஞ்சடைப் ............ காப்புக்கு முதலாக்காது என்றார்.(2)
|