இதுவுமது
   
28. பதினொரு மூவரும் பங்கயத் தோனும் பகவதியும்
நிதிமுத லோனும் 1பருதியுஞ் சாத்தனும் 2நீளமரர்க்
கதிபதி தானு மறுமுகத் தைங்கரத் தற்புதனும்
மதிபுனை வேணி வடுகனுங் காவல்செய் வானவரே.

     (உரை I).
எ - ன், வகுத்த காப்புக்குரிய வானவரைத்
தொகுத்துணர்த்............று.

     (உரை II). எ - து; பிள்ளைத் தமிழென்னும் பிரபந்தத்துக்கு
முகவுரைக் காப்புக்கு வைக்கும் தேவர்களை உணர்த்...........று.

     பதினொரு மூவர் என்றது ஏகாதச ருத்திரரையும்,
பன்னிரண்டாதித்தரையும், அட்ட வசுக்களையும், மருத்துவர்
இருவரையும். பங்கயத்தோனும் பகவதியும் என்பது திருமாலுந்
திக்கமலத்து உதிக்கப்பட்ட பிரமனையும், பாலைநிலத்துக்குத்
தலைவியாகிய பகவதியையும். எண்ணிதிக்கு முதல்வனாகிய
குபேரனையும் ஆதித்த பதவிபெற்ற மூர்த்திகளையும் அரியர
புத்திரனாகிய சாத்தனையும் தேவந்திரனையும் அறுமுகக்
கடவுளையும் விநாயக மூர்த்தியையும் வைரவ தேவனையும்
காப்புக்குத் தேவதைகளாக வைத்துப் பாடுக.


     (கு - ரை).
பகவதியைப் பாலை நிலத் தெய்வமென்பர்
களவியலுரைகாரர். தொகை கருதி ஆதித்தர்களைப் பதினொரு
மூவரில் அடக்கியும், சிறப்புக் கருதி, ‘பருதியும்’ என்று தனியாக
விதந்தும் கூறினார். வைரவக் கடவுளுக்கும் சிவபெருமானைப் போல்
பிறை முடித்த வேணி உண்டென்பர்.

     (பி - ம்.) 1 ‘பரிதியுஞ்’ 2 ‘நீள்வானவர்க்’ (3)