சொற் பொருத்தம்
   
3. *கங்கையு மானுங் கடுக்கையுந் திங்களும் காப்புடைய
துங்கன் முகினிற வண்ணனும் வேலையிற் றொல்கதிரும்
ஐங்கரத் தற்புதன் றன்னையு மாறு முகத்தனையும்
பங்கயத் தோனையுங் கூறுக பாவிற் பரிவுடனே.

     (உரை II). எ - து. சொற்பொருத்தம் ஆமாறு உணர்த்...று.

     ஒரு பிரந்தம் பாடுமிடத்து முதற்கண் கொலை முதலாகிய
சொற்கள் வாராமல் கங்கையையும் மானையும் கொன்றை
மாலையையும் சந்திரனையும் தரித்த அரனையும், நெடுமாலையும்,
ஆதித்தனையும், ஐங்கரக் கடவுளையும், ஆறு முகத்தானையும்,
பிரமனையும் முன்னாக வைத்துப் பாட வேண்டும் எ - று.

     (கு - ரை) இக்காரிகை சிறப்புடையதாகத் தோற்றவில்லை.(3)