|
பிள்ளைத்
தமிழுக்குப் பருவ வரையறை
|
|
|
30. |
மூன்று
முதலிரு பத்தொரு 1திங்கள் முடிவளவாய்த்
தோன்று நிலைபத்துஞ் சொல்லுவர் தோகையர்
தங்களுக்கும்
ஆன்ற 2புகழ்ச்சிக்கு மவ்வகை யாமென்பர் ஐந்தேழென
ஏன்றநல் 3லியாண்டி னகவரை தானும் 4இயம்புவரே. |
(உரை
I). எ - ன், உரைத்த தமிழுக்குப் பருவ வரையறை
உணர்த்...........று,
(இ - ள்). மூன்றாம் திங்களிற் காப்பும்,
ஐந்தாம் திங்களிற்
செங்கீரையும், ஏழாம் திங்களில் தாலும், ஒன்பதாம் திங்களிற்
சப்பாணியும், பதினோராம் திங்களில் முத்தங் கூறலும்,
பதின்மூன்றாம் திங்களில் வாரானையும், பதினைந்தாம் திங்களில்
அம்புலியும், பதினேழாம் திங்களிற் சிறுபறையும், பத்தொன்பதாம்
திங்களிற் சிற்றில் சிதைத்தலும், இருபத்தோராம் திங்களில் சிறு
தேருருட்டலும் இவ்வாறு எல்லாப் பருவத்தையும் பேசலாம்.
இதுவன்றி ஐந்தாண்டு வரையினும் ஏழாண்டு வரையினும்
மொழியலாம் எ - று.
(உரை I). .................இஃதன்றிப்
பெண்பாற் புகழ்ச்சிக்கும்
இந்தப் பிள்ளைத்தமி்ழ் பாடலாம். அதற்குப் பருவம் ஐந்து வருஷம்.
ஏழு வருஷத்துக்கு மேற்படில் ஆகாது.
(கு - ரை.) இங்கே கூறிய பருவங்களின்
வரையறை ஒற்றைப்
பட்ட மாதங்களாகவே இருத்தல் குறிப்பிடத் தக்கது. இரட்டைப்பட்ட
மாதங்கள் விலக்கென்பர்.
(பி
- ம்.) 1 திங்கள் முடியளவாய்த்
திங்களின்
முன்பியலத் ; 2 புகழ்ச்சிக்கணிவ்வகை ;
3
லாண்டி ; 4 இயம்புதுமே. (5)
|