|
இலுபஇருபா
இருபது, இரட்டைமணிமாலை,
இணைமணிமாலை
|
|
|
37. |
இருபா
விருபது வெண்பா வகவல் இரட்டைமணி
தருபா விருபது வெண்பாக் கலித்துறை தாமிவையாம்
வருபா விரண்டிரண் டாத்தம்முண் மாறின்றி நூறுவரிற்
பொருமான் விழியா யிணைமணி மாலை புகல்வர்களே. |
(உரை
I). எ - ன், இருபா இருபது, இரட்டைமணி மாலை,
இணைமணி மாலை ஆமாறுணர்த்....................று.
(இ - ள்.) வெண்பா வந்து பின் ஆசிரியப்பாவும்
வந்து
இருபது பாட்டான் முடிவது இருபா இருபதாம். வெண்பாவும் அதன்
பின் கலித்துறையும் வந்து இருபது பாட்டான் முடிவது இரட்டைமணி
மாலையாம். வெண்பா இரண்டு வந்து பின் இரண்டு கலித்துறை
வந்து நூறு பாட்டான் முடிவது இணைமணி மாலையாம்.
வெண்பா என்பது செய்யுட்களுக்குப் பொது.
(உரை II)...................வெண்பாவும்
அகவலும் மாறி மாறி நூறு
பாடுவது இணைமணி மாலையென்று சொல்லப்படும் எ - று.
(கு - ரை.) இருபா-முதலிருபாவாகிய வெண்பா
அகவல்,
நேரிசை வெண்பாவும் ஆசிரிய விருத்தமும் தம்முள்மாறி இருபது
பாட்டாய் முடிவதும் இரட்டை மணிமாலையாம்;
இரட்டைமணிமாலை இயம்புங் காலை, வெண்பா கலித்துறை
விரவிப் பப்பத்தும், நேரிசை வெண்பா ஆசிரிய விருத்தம் இவற்றா
மிருபதந் தாதித் தியம்பலே (பிரபந்ததீபம்,
8.) இதில்
உள்ள பிரபந்தங்கள் எல்லாவற்றிற்கும் வெண்பா வருதல்
பொதுவானது என்பதை, செய்யுட்களுக்குப் பொது என்றார். (12)
|