சின்னப்பூ, தசாங்கம்
   
40. நேருந் தசாங்கத்தை நேரிசை வெண்பாவின் ஈரைம்பது
1சேரவோர் தொண்ணூ றெழுபதோ டைம்பது
                                 செப்பிடுங்கால்
ஆரியர் சின்னப்பூ வென்றே யுரைப்பர் அவையொருபான்
சாரிற் றசாங்க மெனவுரை யாநிற்பர் சான்றவரே.

     (உரை I). எ - ன், சின்னப்பூவும் தசாங்கமும் ஆமாறு
உணர்த்...................று.

     (இ - ள்). முன்சொன்ன தசாங்கங்களை நேரிசை
வெண்பாவினால் மறையோர் முதலாய் வருவனவாய்ச் சிறகுமுறை
நூறு, தொண்ணூறு, எழுபது, ஐம்பதுமாக மொழிவது சின்னப்பூவாகும்;
மலை முதலாகிய பத்தையும் ஒரோ ஒன்று உரைப்பது
தசாங்கமென்றவாறு.

“உரைத்த தசாங்க மாவன பத்தாக
நிரைத்து வருவது நேரிசை வெண்பா
அமரரைச்
செங்கோல் வேந்தரைச் செப்புதல் சின்னப் பூவாம்
ஏனை யோர்க்குத் தசாங்கமல் லாதன
என்ப இயல்புணர்ந் தோரே”

என்பது முள்ளியார் கவித்தொகை; ஆகலின் அமரர்க்கும்
அரசர்க்கும சின்னப் பூ ஆவது. ஒழுந்தோர்க்குத் தசாங்கம்
எடுத்தோதல் சிறுபான்மை யென்பர்.


“மன்னர் ஏவல் பெற்ற மாந்தர்க்குத்
தொண்ணூ றெழுபது சொல்லியல் வரையார்”

“ஆங்கவை இனமுறை ஒன்றுமூன் றைந்தெழு [முப்பது]
ஓங்கிய வெண்பாச் சின்னப் பூவே.”

     (உரை II). எ-து, மலை.............ஆணை யென்ற பத்தையும்
ஒவ்வொன்றுக்கும் பப்பத்து நேரிசை வெண்பாவாக நூறு நேரிசை
வெண்பாப் பாடுவது சின்னப்பூ வென்னும் பிரபந்தமாம். இது ஆரிய
மரபில் முடிபுனைந்த மன்னர்க்காம். இந்தத் தசாங்கம் பத்தையும்
தனியே ஒரு பாவிலே ஓர் உறுப்புவரப் பத்துப் பாப்பாடுவது தசாங்க
வருணனையென்று பேராம் எ - று.

     (கு - ரை). வேந்தர்களுடைய சின்னங்களின் சிறப்பெல்லாம்
தோன்றக் கூறுவது சின்னப்பூ.


     (பி - ம்.) 1 ‘சேருமா றொவ்வொன்றிற் பத்துப்பத் தாயுறச்
செப்பிடு்ங்கால், ஆரிய மன்னர்க் கதுசின்னப் பூவென்பர்
வேறொருபாச்’ (15)