|
பெண்களின்
ஏழு பருவங்கள்
|
|
|
46. |
பேதை
முதலெழு வோர்க்குப் பிராயங்கள் பேசிடுங்கால்
1ஆதியி லைந்தேழ் பதினொன்று பன்மூன்று
பத்தொன்பதே
மீதிரு பத்தைந்து முப்பத்தொன் றாகிய நாற்பதென
ஓதுவர் தொன்னூற் பருணித ரெல்லாம்
உணர்ந்துகொண்டே. |
(உரை I). எ - ன், பேதைமுதல் எழுவர்க்கும் உரிய பருவ
வரையறை உணர்த்...............று.
(இ - ள்). பேதை ஐந்துமுதல் ஏழாம்;
பெதும்பைக்கு எட்டும்
ஒன்பதும் பத்தும்; மங்கைக்குப் பதினொன்றும் பன்னிரண்டும்;
மடந்தைக்குப் பதின்மூன்று முதற் பதினெட்டளவும்; அரிவைக்குப்
பத்தொன்பது முதல் இருபத்து நான்களவும்; தெரிவைக்கு
இருபத்தைந்தாதி முப்பதளவும்; பேரிளம்பெண்ணுக்கு
முப்பத்தொன்றாதி நாற்பதளவும் முடியும் பருவங்கள் எ - று.
ஓதலும்
பாடலு மூசலும் பிறப்பும்
் பதினெண்
தேசத்துப் பலபல பேச்சின் நவிறலும்
அனைவர்க்கு முரித்தே ஆயுங் காலை
மங்கை முதலா மற்றவரும்
ஆடை யுடுத்தலும் ஆகம் புனையலும்
அம்மனை கழங்கே யூசல் பந்தொடு
சூது பொருதலுங் காளையர்ப் பிரிதலும்
ப............யத்திலும் மக்களுள்
வாக
அனையவை பிறவுமவர்க் குரிய வென்ப. |
(உரை
II). எ - து. எழுவகைப் பருவம் அறியுமாறு:
பேதைக்குப் பிராயம் ஏழு, பெதும்பைக்குப் பிராயம் பதினொன்று,
மங்கைக்குப் பிராயம் பதின்மூன்று, மடந்தைக்குப் பிராயம்
பத்தொன்பது, அரிவைக்குப் பிராயம் இருபத்தைந்து, தெரிவைக்குப்
பிராயம் முப்பத்தொன்று, பேரிளம் பெண்ணுக்குப் பிராயம் நாற்பது.
இந்த எழுவகைப் பருவத்துக் குணமுமறிந்து பாடுக. அந்த அந்தப்
பருவத்துக் குணம் தவறிற் குற்றமாம். இந்த எழுவகைப் பருவ
மங்கையரும் திருவுலாப்புறத்து வருகிற தலைமகனைக் கண்டு
மயங்குவதாகப் பாடுவது உலாவென வழங்கப்படும் எ - று.
உலாவென்னும் பிரபந்தம் பாடுவது; முடிபுனைந்த
மன்னவருமாய் இருபத்தொரு பிராயத்துக்கு உட்பட்டவர்களுக்கும்
தேவர்களுக்கும் உலாப்பாடலாம். அல்லாதவர்களுக்கு ஆகாது.
(கு - ரை.) உலாவை உலாப்புறமென்றும்
வழங்குவர். இங்கே
கூறப்பட்ட பிராயங்கள் வேறு நூல்களில் சிறிது மாறுபட்டும்
காணப்படுகின்றன.
(பி
- ம்.)ம்.) 1 ஆதலைந் தேழ்பதி னொன்றுபன் மூன்றுபத்
தொன்பெனவே(21)
|