|
அட்டமங்கலம்,
நவமணிமாலை, தசப்பிராதுற்பவம்
|
|
|
52. |
இறைவனை
யேத்திய வெட்டா சிரிய விருத்தம்வண்ணம்
மறைமுத லோரட்ட மங்கல மென்பமற் றொன்பதவை
நறைவளர் கோதை நவமணி மாலைபத் தான்வரினே
1குறைவில் லதுதசங் கூறிற் றசப்பிரா துற்பவமே. |
(உரை I). எ - ன்; அட்டமங்கலமும், நவமணிமாலையும்
தசப்பி ராதுற்பவமும் ஆமாறுணர்த்.............து.
(இ - ள்). ஆசிரிய விருத்தம் எட்டு
வருவது அட்ட
மங்கலம் ; இச் செய்யுள் ஒன்பது வருவது நவமணிமாலை ; இச்
செய்யுள் பத்தாற் கருமுகில் வண்ணன் அவதாரம் பத்தினையும்
வருணித்து வருவது தசப்பிராதுற்பவமாம் எ - று.
சந்த
மாலையிற் றாண்டக மாலையும்
தொண்டி னியன்றது நவமணி மாலை :
எட்டு வருவ தட்டமங் கலமாம் ;
ஏழொடு வருவது தாரகை மாலை;
மங்கல மாவது மாலவ தாரம்
கொண்டாங் கொருபதாற் கூறலு மாமே.
இளைய மகளிர தியம்பின வென்பது
திருவி னாசிரியத் தூக்கிய லாகலின்
தாரகை மாலையுந் தக்கவழிப் பிறந்து
புணரத்...........தாண்டக மென்பது
இருபத்தா றெழுத்தின் மேற்பட்ட
எழுத்தான் வரும(டி) நான்குடையவற்றைச்
சந்தமுந் தாண்டகமுங்குருவும் இலகு(வு)ம்
ஒத்த எழுத்தான் வருமே. |
(உரை
II). எ - து, முடிபுனைந்த மன்னர்க்கு எட்டாசிரிய
விருத்தம்...........பத்தாசிரிய விருத்தம் பாடுவது தசாங்கத்தியல்
(பி - ம்) என்று சொல்லப்படும்
எ - று. இப்படிப்
பாடுமிடத்துக் கொலை முதலாகிய கொடுமைச் சொல் வரலாகாது.
(கு - ரை). தசப்பிராதுற்பவம் என்பது
அரிபிறப்பு,
உற்பவமாலை என்ற பெயர்களாலும் வழங்கப்பெறும். திருமாலின்
பிறப்பை விருத்தம் பத்தாலே வாழ்த்தித் தலைவனைக் காப்பாற்றுக
என்றல் இந்நூலின் இலக்கணமாகும், தொண்டு - ஒன்பது. (27)
(பி
- ம்.) 1
குறைவில் தசாங்கத் தியலது வாமென்று கூறுவரே.
|