|
மெய்க்கீர்த்தி,
ஆற்றுப்படை
|
|
|
53. |
சிறந்தமெய்க்
கீர்த்தி யரசர் செயல்1சொற் றனவாய்ச்
செயயுள்
2அறைந்ததோர் சொற்சீ ரடியாம் 3புலவர்கள்
வாழ்த்துநலம்
4நிறைந்த பொருநரைப் பாணரைக் 5கூத்தரை நீணிதியம்
பெறும்படி யாற்றுப் படுப்பன வாசிரி யம்பெறுமே; |
(உரை
I). எ - து ஆசிரியவடியும் வஞ்சியடியுமாகிய
சொற்சீரடியானே சிறந்த மெய்க் கீர்த்திச் செயலான(வை) மொழிந்தன
வென்றார் ; அக்கீர்த்தி ஆசிரிய அடியும் வஞ்சி அடியுமாகிய சொற்
சீரடியானே முடியும் ; கூத்தரையும் பொருநரையும் பாணரையும்
புலவர் ஆற்றுப் படுப்பது ஆசிரியம் பெறும் எ - று.
(உரை II). எ - து, ஒரு தலைமகனிடத்திலே
நின்று பரிசில்
பெற்ற பாணன், நடுவில் வருகிற பாணரைக் கூத்தரைக் கண்டு,
அவர்களுக்கும் பரிசில் கொடுத்த தலைமகன் ஊரும் நாடும் அவன்
பேரும் அவனுடைய சிறப்பும் உரைத்து, அவனருகு நீரும்
செல்லுவீராகில் வேண்டியது தரும் என்னும்படி ஆறு அகவற்
கவியாகப் பாடுவது ஆற்றுப் படையென்னும் பிரபந்தமாம் எ - று.
(கு - ரை). அரசர்களுடைய உண்மைப்
புகழைக் கூறுவது
மெய்க்கீர்த்தி எனப்படும். சாசனங்களின் தொடக்கத்தில்
மெய்க்கீர்த்திபயின்று வரும். ஒவ்வோர் அரசனுடைய
மெய்க்கீர்த்தியின் தொடக்கம் ஒவ்வொரு விதமான தொடரை
முதலிலே பெற்றிருக்கும். சொற்சீரடி. அம்போதரங்கம், அசையடி,
பிரிந்திசைக்குறள், எண் என்பன ஒருபொருட் சொற்கள். ஆறு
அகவற்கவியாகப் பாடுவது என்றது திருமுருகாற்றுப்படையை
நோக்கிப் போலும். ஆற்றுப்படையிற் கூறப்படும் பொருள்கள்
இவையென்பது மலைபடு. 67 - 93 - ஆம் அடிகளாலும்
அவற்றின்
உரையாலும் விளங்கும்.
(பி
- ம்.) 1 சொற்றவாறு செய்யுள் 2
உறைந்திடு
3 புலவரை வாழ்த்துமிடம் 4
திறந்தருதானை
5 கூத்தரையும் (28)
|