|
இதுவுமது
|
|
|
60.
|
முடியடுப்
பிற்றோல் வயிற்றுக் குழிசியில் மொய்குருதி
நெடுவுலை யேற்றி நிணம்பெய்து கோப நெருப்பெரித்துத்
தொடியுடைத் தொட்டுடுப் பிற்றுழாய்ப் 1பேயூட்ட
அம்மையுண்டங்
கடுதிறன் மன்னனை மன்னூழி வாழ அருளுதலே. |
(உரை I). எ - ன், பட்ட மன்னர்கள் முடிகளே அடுப்பாக
ஆனையின் வயிறே குழிசியாகக் குருதியே உலை நீராக நிணமே
உண்ணமுதமாக (ப்பெய்து) கோபமே நெருப்பாகத் தொடித் தோள்களே
துடுப்பாகத் துழாவி (யாக்கி)ப் பேயூட்ட, நாயகியும்
உண்டு செருவென்ற மன்னனை மன்னூழி வாழ்வதென்று நின்று கூறு
(தலு) மாம் எ - று.
(உரை II). எ - து, சமர பூமியிற்பட்ட
மன்னர் முடிகள்
அடுப்புக் கல்லாகவும் [இரத்தினங்கள் அக்கினியாகவும் வைத்து
ஆனைக்கால்களே உரலாகவும் ஆனைக்கொம்புகளே
உலக்கையாகவும் பட்ட மன்னர் பற்களே அரிசியாகயும் குத்தி]
ஆனையின் வயிறுகளே மிடாவாகவும் குருதியே உலை நீராகவும்
விட்டுப் பூதமும் பேய்களும் கோபமே நெருப்பாகத் தெரிந்தெரி்த்துப்
பட்ட மன்னர் தோள்களே துடுப்பாகக் கொண்டு கிளறி
நிணங்களையும் போட்டுக் கூழாக்கி அந்தக் கூழைப் பேய்கள்
வாரிக் கையாலே பத்திரகாளிக்கு ஊட்டப் பத்திரையும் பசி தீர்ந்து
அந்த யுத்தம் பண்ணின மன்னவனை நீடூழி காலம் வாழ்க வென்று
வாழ்த்தினதாகப் பாடுவது பரணியென்னும் பிரபந்தமாம் எ - று.
(பி
- ம்.) 1 யாக்கிப் பேயூட்ட வம்மை, வடிவுற
வுண்டாங் கடுதிறன் மன்னனை வாழ்த்துதலே (35)
|
|
|