காப்பிய இலக்கணத்துக்குப் புறநடை
   
65. நெறியறிந் தவ்வா றியற்றிய வாறு 1நிலைநிற்றலும்
2பெறும்பெய ரென்பது பேசு மறமுதல் நான்கினுந்தாம்
குறைய வரினுமுன் கூறிய காவியங் கோகனகச்
செறிமல ரல்லிப் பொகுட்டினில் வாழுந் திருந்திழையே.

     (உரை I).
எ - ன், இவ்விலக்கணங்களிற் குறையினும்
காவியங்கள்எ - று.

     (உரை II). எ - து, நெறிமுறை தவறாமற் பாடுமிடத்து நல்ல
நாளும் முகூர்த்தமு மிட்டுப் பாட்டுடைத் தலைமகனுக்கு ஒத்த
இலக்கணத்திலே பிரபந்தம் பாடத் தொடங்கப் பெறும்; இப்படிக்
காவியம் பாடும் போது பெருங்காப்பிய நெறியிற் சில
குறைந்துவரினும் அறமுதல் நான்கும் குறைவுபட்டு வரினும் அது
சிறுகாப்பிய மென்று பேசப்படும் எ - று.

     (பி - ம்) 1 ‘நிறைநீக்கலும்’ 2 ‘பெறுபெயர்’ (40)