|
தொகை
நிலைச் செய்யுள்
|
|
|
66. |
பாட்டுப்
பொருளிடங் காலந் தொழில்பாட்
1டளவினெண்ணின்
நாட்டித் 2தொகுத்தவுஞ் செய்தவன் செய்வித்
தவன்றம்பேர்
மூட்டித் தொகுத்தவு மாகி முதனூன் மொழிந்தநெறி
கேட்டுத் தெரிந்துகொள் கிஞ்சுகச் செவ்வாய்க்
கிளிமொழியே. |
(உரை
I). எ - ன், தொகை நிலைச் செய்யுட்களை
உணர்த்...................று.
(இ - ள்.)பாட்டின்
பொருளால் இடத்தால் காலத்தால்
தொழிலால் வருவனவும், பாட்டினது அளவால் எண்ணால்
வருவனவும், செய்தவன் பெயரை நாட்டித் தொகுவனவும்,
செய்வித்தவன் பெயரை நாட்டித் தொகுவனவும் ஆம், முன்புள்ளாரால்
சொல்லப்பட்ட இலக்கண நெறியானே புணர்த்தல் எ - று.
................பாட்டாற் றொக்கது..................குறுந்தொகை
; எண்ணாற்
றொக்கன பன்னிரு படலமும் பதிற்றுப்பத்தும்
; செய்தான் பேர் பெற்றது திருவள்ளுவப்பயன் ;
செய்வித்தானாற் பேர் பெற்றன
பிங்கல சரிதை, வாமன
சரிதை ; இவற்றுள் முற்பட்டவை ஒருவராலும்
பலராலும் உரைக்கப்படும் ; ஒருவரான் உரைக்கப்பட்டது
நான்மணிக்கடிகை ; பலரால் உரைக்கப்பட்டது
அகநானூறு ;
என்பனவெல்வாம் இப்பெற்றியாய் உரைக்க.
செய்யு
ளென்பவை தெரிவுற விரிப்பின்
முத்தகங் குளகந் தொகைநிலை தொடர்நிலை
எத்திறத் தனவு மீரிரண் டாகும்.
அவற்றுள்,
முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும்.
குளகம் பலபாட் டொருவினை கொள்ளும் |
தொகை நிலைச் செய்யுள் மேற் சொன்னவாறே கொள்க.
பொருளினும்
சொல்லினு மிருவகை தொடர்நிலை
பெருங்காப்பியமே காப்பிய மென்றாங்
கிரண்டா வியலும் பொருட்டொடர் நிலையே |
என்பது தண்டியலங்காரம்.
(உரை II), எ - து, பாட்டிடம் காலத்திடம்
பொருளிடம்
தொழிலிடம் என்னும் வகைகளை அறிந்து மனிதரானவர்க்கும்
தேவரானவர்க்கும் அவரவர் தொழிலும் பேதமும் அறிந்து அந்த அந்தச் சாதிகளுக்கு அடுத்த
தொழிலைப் பாடலாம் ; அடாத
தொழிலைப் பாடினால் குற்றப்பாடு வருமென்றறிந்து பாடவும் அடாத
பாட்டுப் பாடலாகாது எ - று.
(கு - ரை). பொருளாற் றொக்கன அகநானூறு,
புறநானூறு.
இடத்தாற் றொக்கன களவழிநாற்பது, புறநாட்டுச் செய்கை முதலியன.
காலாத்தாற் றொக்கன கார்நாற்பது, பருவமாலை முதலியன. தொழிலாற் றொக்கன ஊசல்,
ஊடன்மாலை, கூடன்மாலை போல்வன.
பாட்டாற் றொக்கன கலித்தொகை, பரிபாடல் போல்வன. அளவாற்
றொக்கன குறுந்தொகை, நெடுந்தொகை, நாலடியார் போல்வன.
இவற்றுள், அளவென்றது பாட்டின் அடியளவு ; எண்ணென்றது
நூலுள் அடங்கியுள்ள பாட்டுக்களின் கணக்கு.
ஒரோவொருநூல் மேற்கூறிய பொருள் இடம் காலம்
முதலியவற்றுள் இரண்டினாற் றொக்கு வருதலும் கொள்க, உ-ம்.
அகநானூறு : இது பொருளானும் எண்ணாலும் தொக்கது :
செருக்களவஞ்சி : இஃது இடத்தானும் பாட்டானும் தொக்கது.
இவையேயன்றி மிகுதியானும் தன்மையானும் முதனூலானும்,
இடுகுறியானும் உறுப்பினானும் பிறவாற்றானும் பெயர் பெறுவனவும் உள.
(பி
- ம்). 1 டளவுமெண்ணி 2 தொகுப்பவுந்
தேவர்க்கும்
மானிடரானவர்க்கும், கூட்டித் தொகுப்பவுஞ் செய்தொழி லாயவை
கூட்டலாகக் (41)
|