சித்திரச் செய்யுளுக்கு ஆவதோர் நெறி
   
67. சக்கர மேமுதற் சித்திரச் செய்யுள் தசாங்கங்களை
அக்கரக் கூறு படுப்பினு மானந்தம் அல்லவற்றின்
இக்குண மில்லாமை யானவை சொன்ன இவையுமன்றி
மிக்குள யாவு மிமையோர்க் சிலக்கு விலக்கிலவே.

     (உரை I). எ - ன், சித்திரச் செய்யுள் திறத்துப்படும்
இக்குணமும் புகற்றமும் முறைமையும் உணர்த்..................று.

     (இ - ள்.) சக்கரமும், சுழிகுளமும், ஏகபாதமும் எழு
கூற்றிருக்கையும், காதை கரப்பும், கரந்துறை பாட்டும், தூசங்கொளலும்,
வாவல் நாற்றியும், கூட சதுக்கமும், கோமூத்திரியும், ஒற்றுப்
பெயர்த்தலும், ஒருபொருட் பாட்டும், சித்திரக் காதையும்,
விசித்திரப்பாவும், விகற்பநடையும், வினாவுத்தரமும்,
சருப்பதோபத்திரமும், சார்ந்தவெழுத்து வருத்தனமும், நாகபந்தமும்,
முரசபந்தமும், விதான வருக்கமும், முந்திரியார் வஞ்சின (மும்)
முதலாம் சித்திரச் செய்யுள் செய்யுங்கால் தலைவனது,
தசாங்கங்களின் எழுத்துக்களைப் பிரித்து நிறுத்திப் புணர்ப்பானாகில்
ஆனந்தமாம். அந்நெறியல்லன மானிடவரைப் புணர்த்தலாகா.அல்ல
நெறியும் மையோர்க்காகின் ஆம் எ - று.


“மானிடர் தம்மைக் கலிப்பாப் பாடலும்
தாழ்குழ லாரைத் தனிவெண்பாப் பாடலும்
.............முன்பொரு ளுணந்திசி னோரே”

என்பது மாமூலம்.

     (உரை II). இவ்வகைப்பட்ட செய்யுளெல்லாம் பாடுமிடத்துத்
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் முடிபுனைந்த மன்னர்க்கும்
பாடலாம். அல்லாதவர்களுக்குப் பாடலாகாது. பாடில்
பாடுவித்துக்கொண்ட தலைமகனுக்கு அர்த்த நாசமும் புத்திர நாசமும்
பிராண நாசமும் வரும். பாடிய புலவனுக்குச் சொல்லானந்தத்தினாலே
அடாத வியாதி யடுத்து அவன் குட்டநோய் கொண்டு காலும் கையுங்
குறைந்து மரிப்பான். மறுமைக்கு நரகத்து அழுந்துவன். அதனால்
சாதிக்குத் தக்க செய்யுளறிந்து பாடவும், ‘அடாது பாடிற் படாதுபடும்’
என்றாராகலின். (42)