பாற் பொருத்தம
   
7. குற்றெழுத் தாடூஉ மகடூஉ நெடினல்ல வென்றுகொள்வர்
மற்றெழுத் தாமுயிர் மெய்க்குறி லாணெடில் அவ்வகையே
ஒற்றெழுத் தாய்த மலியென்று பாட்டின்முன் ஓத
                                   வொட்டார்
பொற்றொடிச் சிற்றிடைப் போர்வே னயனப்
                                 புணர்முலையே.

     (உரை I).
எ - ன், மூவகைப் பாலும் ஆமாறு உணர்த்.......று

     (இ - ள்). அ, இ, உ, எ, ஒ இவை ஐந்து குற்றெழுத்தும்
ஆடூஉ என்றறியப்படும். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இ்வை
நெட்டெழுத்தேழும் மகடூஉ என்று அறியப்படும். இவை இனங்களின்
முதற் செய்யுளின் முதலெழுத்தாகக் கொள்க. உயிர் மெய்க்கும்
இவ்வாறு. ஆய்தமும் ஒற்றெழுத்தும் அலியாதலான் மொழிக்கு முன்
வைக்கப்படா.

“பேடாகும் ஒற்றுக்கள் பெண்ணாம் உயிர்மெய்கள்
ஆடூஉ வுயிரென் றறையலாம்-நாடுங்கால்
பெண்ணா மெழுத்தே பெருங்கவியின் முன்னெடுத்துக்
கண்ணாரக் காட்டல் கடன்”

என்று சொன்னாரும் உளரெனக் கொள்க. சொல்லாதலானும் பிற
சான்றோர் செய்யுளிடத்து உயிர் முதல்களும் வருதலானும் உயிர்
உடன் பட்டாரெனக் கொள்க. ஆரணம், உலகம், அமுதம், எழுத்து
என்பன மங்கலம். [சொல்ல வேண்டும் காரணம்] ஆண்பாற்
புகழ்ச்சிக்கு ஆணெழுத்தும், பெண்பாற் புகழ்ச்சிக்குப்
பெண்ணெழுத்தும் சிறப்புடைத்தென்று சொன்னாரும்
உளரெனக் கொள்க.


“ஆண்பாற் புகழ்ச்சிக் காணெழுத் துரிய
பெண்பாற் புகழ்ச்சிக்குப் பெண்ணெழுத் துரிய
அவ்விரு பாற்கு மலியெழுத் தாகா
தம்முள் மயங்கினும் தவறின் றென்ப”

என்பது பருணர் பாட்டியல்.

     (உரை II)
.
.................................ஆண்பாலுக்குப் பெண்பால்
எழுத்தும் பெண்பாலுக்கு ஆண்பாலெழுத்தும் வைக்கலாகாது.

     உரை I-இல் இனங்களென்று குறிப்பிடப்பட்டவை பன்னிரு
பாட்டியலில
இனவியலிற் கூறப்பட்ட நூல்கள் போலும்.      

     (கு - ரை).
குற்றெழுத்து - உயிர்க்குறில். அவ்வகையே-
நெட்டுயிரைப் போலப் பெண்பாலாகும். (7)