|
இதுவுமது
|
|
|
71. |
நூற்பெயர்
நூல்செய்த வாசிரி யன்பெயர் நூல்விளங்கித்
தோற்றிடச் செய்தற்குக் காரணம் 1யாப்புத்தொன் னூலின்வழி
பாற்படு மெல்லை யறிதற் பயனிவை யுஞ்சிறப்பின்
மேற்படு பாயிர மென்றா சிரியர்கள் வேண்டுவரே. |
(உரை
I). எ - ன், வடநூல்வழிச் சிறப்புப்பாயிரம்
உணர்த்.......................று.
(இ - ள்.) நூற்பெயரும், ஆக்கியோன்
பெயரும், நூல்
செய்தற்குக் காரணமும், வடநூல் வழி எழுத்தும், வரைவாகிய பயனும்
இவை ஐந்து காரியமும் சிறப்புப்பாயிரம் என்பர் ஒரு சாராசிரியர்
எ - று.
(உரை II). எ - து, யாதானுமொரு நூலுரைக்க
வேண்டுமிடத்தில் நூற்பெயரும், காரணமும் ஆக்கியோன் பெயரும்
யாப்பும் வழியும் அளவும் பயனும் உரைப்பது சிறப்புப்பாயிரம் என்று
சொல்லுவர் புலவர் எ - று
(கு - ரை).யாப்பு
- தொகை வகை முதலியவற்றுள் இன்ன
தென்பது. உரை II உள்ள ஏட்டில் இக்காரிகை பாயிரத்தில்
கூறப்பட்டுள்ளது.
(பி -
ம்). 1 இந்நூல்
வடநூல் வழி (3)
|