சமநிலை, வியனிலை
    
8. *சாற்றுந் தலைவ னியற்பெய ருக்குத் தகும்வகையே
தோற்றும் வியன்வரி லானந்த மாகுஞ்சொல்
                                லாவெழுத்தாம்
ஏற்ற வெழுத்து வரினு மிசைந்த தியற்பெயர்க்கே
ஆற்றும் பொருத்த மனைத்துஞ் சமநிலை யாமென்பரே.

     (உரை II). எ-து, உண்டிப்பொருத்தம் ஆமாறுணர்த்......று

     பாட்டுடைத் தலைவன் இயற்பெயர் முதலெழுத்து முதலாகத்
தொட்டு அவன் பேர் பிரபந்தச் செய்யுளின் முதலெழுத்தளவும்
எண்ணி வந்தால் சமநிலையாகில் உத்தமம், வியனிலையாகில்
ஆகாதென்று சொல்லுவர் புலவர்.

     (கு - ரை). ஆனந்தம் - குற்றம். சொல்லா எழுத்து -
முதன் மொழிக்குச் சொல்லத் தகாத எழுத்து. சமநிலை, வியனிலை :
சூ.5. I உரைப்பிரதியில் இச் சூத்திரம் வேறு உருவில் அமைந்துளது;
சூ. 82. (8)