|   | 
           
             இதுவுமது 
           | 
         
         
          |   | 
            | 
         
         
          | 80. | 
          வாணிபஞ் 
            செய்த லுபகார மாசாரம் வாய்ந்த செயல் 
            பேணி யுழுத லிருபிறப் பாளர் 1நெறிவழுவா 
            ஆணை வழிநிற்ற லானிரை போற்றல் அகன்றவல்குற் 
            பூண்முலை யாயிவை வேளாண் குடிக்குப் புகன்றனரே. | 
         
       
           (உரை 
        I). எ - ன், இதுவும் சூத்திரர்க் குரியன சில  
        உணர்......று. 
         
             (இ - ள்). வாணிபம் செய்தல், உபகாரம் 
        ஆசாரம் வாய்ந்த  
        செயல், உழவைப் பேணல், இருபிறப்பாளர் நெறிவழுவாமல் அவர்  
        ஏவுதலைச் செய்தல் ஆனிரையைப் போற்றல் இவை  
        வேளாண்டொழில் எ - று. 
         
             (உரை II). எ - து, வேளாளர் அறுவகைத் 
        தொழில்..... 
        பசுக்களை வளர்த்தல், தானம் பண்ணுதல், வாணிபஞ்செய்தல், உழவு  
        பயிர் செய்தல், மன்னருக்கு இறை யிறுத்தல், வேதநெறிவழுவாத  
        ஒழுக்கத்துடனே தன்னுடைய சாதி மார்க்கம் தவறாதே இப்படி  
        இருப்பது வேளாளர்க்கு இயல்பாம் எ - று. 
         
       
           (பி 
      - ம்.) 1 உரை வழுவா  (12) 
   |