பாக்களின் சாதி
   
82. வேதியன் வேந்தன் வணிகன்வே ளாளன் எனமுறையே
ஓதுவர் வெண்பா வகவல் கலிவஞ்சி ஓதவற்றின்
பேதமு மவ்வகை யானே வருமென்ப பெய்தகட்டால்
தாதல ருங்குழற் றாமரைச் செய்ய சரிவளையே.

     (உரை I). எ - ன், பாக்களது சாதி உணர்த்..........று.

     (இ - ள்). வெண்பா வேதியன் ; அகவற்பா அரசன் ; கலி
வணிகன் ; வஞ்சி சூத்திரன் இவற்றினங்களும் இவ்வாறாம் எ - று.

     மாமூலர் இராசியும் நாளும் கிழமையும் மற்றும்
எல்லாவற்றுக்கும் சாதியும் அறைந்தார் ; அவற்றாற் பயனின்மையின்
இவர் வேண்டிற்றிலரெனக் கொள்க. (14)