|
உவமிக்கும்
உவமைகள்
|
|
|
85. |
1மானி
னிளங் கன்று மஞ்ஞையின் பிள்ளை மதிக்குழவி
2தேனி, னமுதந்தெள் ளாநற வஞ்செழுங் கற்பகப்பூங்
கானிற நீர்வல்லி கல்லாத கிள்ளை கரும்பின் முளை
ஊனிற வேற்கண் மடவார்க் கியைந்த உறுப்புக்களே. |
(உரை I). எ - று, அரிவையர்கட்குப் பருவத்திற்கு உவமை
யுணர்த்...........று.
(இ - ள்), மானின் கன்று, மயிலின்
பிள்ளை...........தேனின்
அமுதம், தெள்ளாநறவம், கற்பகக்கன்று, நீர்வல்லி, கல்லாத கிள்ளை,
கரும்பின் முளை என இனையன மகளிர்க்கு ஓதும் முறைமை எ - று.
(இவை) இளைய மகளிர்க்கே கொள்க, என்னெனில், மேல்
வரும் சூத்திரத்தில் அரிவை முதலாயினர்க்கென்பர்; ஆதலின் ஈண்டு
உரைத்தன பேதை முதலாயினார்க்கு என்ப.
(கு - ரை). பேதை முதலிய இளம் பருவமாதல்
பற்றித்
தெள்ளாநறவம் என்றார்; தெள்ளா - தெளிவடையாத. உலா நூல்களில்
பேதைப் பருவ மகளிரை வருணிக்குமிடத்தில் மான்கன்று முதலிய
உவமைகளைப் புலவர் எடுத்தாளுதல் மரபு.
(பி
- ம்.) 1 மானிற மான்கன்று 2 தேனிற
வின்பமுந்
தெள்ளா நறவுஞ் செழுங்கற்பகக் (17)
|
|
|