|   | 
           
             நல்லவை 
           | 
         
         
          |   | 
            | 
         
         
          | 88. 
             | 
          +அறந்திறம் 
            பாநல் லறிவோ ரறுபத்து நாற்கலையும் 
            திறந்தெரிந் தோர்சினஞ் செற்றம்பொய் காமம்  
                                           
            சிதைக்குஞ்சித்தம் 
            மறந்தொரு காலு மொருபாற் படாதவர் 1மற்றுங்குற்றம்  
            துறந்தவர் தாங்களும் நல்லவை யாமென்று சொல்லுவரே. | 
         
       
       
           (உரை I). எ - ன், நல்லவை ஆமாறு உணர்த்..........று. 
       
           (இ - ள்).தருமநெறி கோடாத அறிவோர், 
      அறுபத்து  
      நாலுகலைகளும் இயற்றுங் கூறுபாடும் அறிவோர், சினமும் வயிரமும்  
      பொய்யும் காமமும் நீத்தோர், சித்தம் ஒருதலைப்படாது எல்லாக்  
      குற்றமுந் தீர்ந்து நின்றோர் குழுமி இருப்பது நல்லவையாம் 
      எ - று. (20) 
   |  
 
	
				
				 | 
				 
			 
			 |