ஓலையிலக்கணம்
   
92. குற்றமில் லாவோலை தன்னிற் குலவுவெண்                                  பாமன்னனைச்
சொற்றதோர் பாவா லரசரைப் பேசிப் பொருட்டிறத்தின்
உற்றவை யென்றொன்று தன்னா லுரைப்பவன் றன்னைச்
                                      சொல்லி
மற்றவன் றன்னையும் பின்னே யுரைத்தல் மரபென்பவே.

     (உரை I). எ - ன், தூக்கும் ஓலையும் ஏற்கும் இலக்கணம் ஆமாறு
உணர்த். .........று.

     (இ - ள்), மூரியும் பிளப்புமில்லாத ஓலையின் கண்ணே
வெண்பாவாற்றான் ஆசிரியப்பாவாற்றான் அரசாளும் அரசன் றன்னைப்
பேசிப் பொருள்பேசும் பகுதியாகிய வாதவிதண்டை சற்பங்களின்தோன்றலென்றுரைக்கும் மற்றவன்றன்னை முன்பு சொல்லி
ஏனோரவரையும் பின்புரைத்து முடிப்பது ஓலைய திலக்கணமாம் எ - று.

“ஓலைய திலக்கணம் உரைக்குங் காலை
நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
பாருடை யோர்க்குப் பதிற்றிரண் டாகும்
வணிகர்க் கீரெண் விரலா கும்மே
சாணென மொழிப சூத்திரர்க் களவே.”

“வெண்பா வகவ லாயிரு மரபினும்
செய்யுட் பரவிய வவ்விரு திறத்தினும்
முற்புறத் திரண்டாம் பி்ற்புறத் தொழிந்து
வரைவென வுரைப்பர் தெரிநூற் புலவர்.”

“சந்தனம் திமிசு சாதி சண்பகம்
உந்திய பதின்முழம் உயர்ந்தவர்க் காசனம்
கூவிளம் பலாசு வணிகர்க்கு வகுத்த
நாலிரு முழமே யுயர்ச்சி யாகும்.”

“பலவே கதிர மறுமுழ முயரம்
நிலமுழு தோர்க்கு நீதி யாகும்
நாடுது நாட்டி நாமவை யாமே.”

“கல்லே பொதுவாந் திசையவர் திசையே
முனிவர்க் கோலை முப்பது விரலே
முறைமையின் முன்கடை யுயர்ந்ததை யுயர்ச்சி,”

“அரசர் முன்கடை யல்லாப் பொதுவின்
முனிவரோ டல்லது மூவர்மற் றியலார்
பிறர்வலிக் கேய்ந்தன வாதனத் தியல்பே.”

“ஈசன் பதியாம் எரியாம் பாலே
பரியார்க் குந்திரு வருளி யுண்பவே.”

“ஒழிந்தவை நான்கும் உரிய வென்ப.”

“மேட மிடப மந்தணர்க் குரித்தே
நண்டரி யரிவை யரசர்க் காகும்
துலையோ டெரிதேள் வணிகர்க் காகும்
சுறவே கும்பம் சூத்திரர்க் காகும்.”

“முறையின் மரபின மறையோர்க் காகும்
கதிரவ னங்கி யரசர்க் குரித்தே
யமனொடு நிருதி வணிகர்க் காகும்

முறைமையின் வருணன்வளி சூத்திரக் காகும்.”
 
-பொய்கையார் கலாவியல்.

     ஆக இவ்வாறு உரையாததென்னையோவெனின் இழுக்கில்லை
(மாபுராணம்).

“திசையு மரமு முதலிய பிறவும்
இயலா வாயினும் இயலப் பெறுமே.”

என்பது கல்லாடனார் கலாவியல்.

     பிறவும் இவ்வாறு சொன்னாரும் உளராகலின் அவரவர் கருத்தை
நோக்கி வேண்டிற்றிலரெனக் கொள்க. ஆசிரியர் நெறி வேண்டாதது
வழக்கொடு பொருந்தாமையின் என்க.

     (உரை II). இந்திர காளியனார் உரைத்தபடி.


“*ஓலைய திலக்கண முரைக்குங் காலை
நாலாறு விரற்றானம் நான்மறை யோர்க்குப்
பார்த்திபர் தமக்குப் பதிற்றிரட்டி விரலே
வணிகர்க் கெண்ணிரு விரலே
சூத்திரர்க் கீராறு விரலே
இப்பரி சேபாட் டெழுதவும் படுமே.”

“அந்தணர்க்கு நாலா றரசர்க் கிருபதாம்
இந்த விரல்வணிகர்க் கெண்ணிரண்டாம்-முந்துவிரல்
வேளாளர்க் கீராறாம் வெள்ளோலை வேயனைய
தோளாய் அறிநீ தொகுத்து.”
 
-கல்லாடனார் வெண்பா

     (கு - ரை.)
மன்னனைச் சொற்றதோர் பா - ஆசிரியப்பா. மூரி -
முரிந்தது. வாதம் - நெறிபற்றிய தருக்கம். விதண்டை - தான்கூறும்
விஷயத்திற் குற்றமிருக்கப் பிறர் கூறும் விஷயத்திற் குற்றம் சாதிப்பது.
சற்பம் - பிதற்றுதல். திமிசு - ஒருவகைமரம். சாதி - சாதிக்காய்மரம். பலவு -
பலாமரம். கதிரம் - கருங்காலி. ‘மூவர் மற்றியலார்’ மூவர் - அரசர், வணிகர்,
வேளாளர். நண்டு - கடகம். அரி - சிங்கம். அரிவை - கன்னி. தேள் -
விருச்சிகராசி. சுறவு - மீனம். (24)


*இந்நூல் 12 ஆம் சூத்திரத்துக்கு II உரையுள்ளவிடத்தில் ஓலையிலக்கணச் சூத்திரங்கள் இங்கேயுள்ளபடி ஏட்டுப்பிரதியில் எழுதப்பெற்றிருந்தன.