|
சபையில்
விலக்கத்தக்கவை
|
|
|
95. |
+கோணத் திருப்பினும் கோபம் பெருக்கினும் குற்றமென்று
நாணத் தகுமவை நாவிற் பயிலினும் நாடிநன்னூல்
ஆணைப் படியன்றி யல்லவை சொல்லினும்
ஆங்கிருந்தோன்
காணப்பொய் கூறினுந் தோல்வியென் றோதுவர் கற்றவரே. |
(உரை I). எ - ன், அவைக்கண் புக்குப் பெருந்திசைக் கண்
அன்றிக் கோணத்து இருப்பினும், கோபத்துச் சொல்லினும்,
குற்றமென்று கடியப்பட்ட வழுச்சொல்லுரைப்பினும், முன்புள்ள
நூலின் ஆணை(ப்படியன்றி) வழுவுரைப்பினும், புகன்ற பொருளைப்
பின்னை யொருகால் இல்லையென்று சொல்லினும்
தொலைந்தானென்று சொல்லுவர் ஒருசாராசிரியர் எ - று. (27)
|
|
|