வெற்றி தோல்விகளின் பெருமை சிறுமை
   
96. +நல்லவைக் கண்ணும் நிறையவைக் கண்ணும்                                   நயத்தொருவன்
சொல்லிய வாதினிற் றோற்றலுந் தான்றொலை வல்லவென்ப
வெல்லுவ னென்னின் மிகச்சிறப் பெய்தி விளங்குமென்ப
அல்லவை தன்னின்முன் வெல்லினு மாகும்                                  அவர்க்கிழுக்கே.

     (உரை I). எ - ன், உரைத்த நல்லவையினும் நிறையவையினும்
ஓதிய மரபிற்றொலையினும் அது தோல்வி எனப்படாது; ஆங்கு
வெல்லுமே யென்னிற் சீர்த்தியோடு சிறப்பெய்தி விளங்கும்; அல்லாது
தீயவை என்பவற்றுள் வெல்லுமாயினும் (அவ்வெற்றி) சிறப்பொடு
விளங்காது எ - று.

“தூக்கியல்வகை யோலையை
செவித்திறங் கொள்ளாது தெரியுங் காலைத்
தானே நம்பி மகனே மாணி
ஆசானென் றவரி லொருவ ரிழுக்கிலைக்
குற்றம் வகுத்துடன் படாமற் சொல்லின்
வென்றியும் பெறுமே”
“அவைபுகு நெறியே ஆயுங் காலை
வாயினி லுரைத்துக் கூடிப்புகுங் காலை
இருவரும் புகாஅ ரொருவர் முன்புகிற்

புக்கவன் றொலையு முய்த்தெனு முண்மையின்
இருவருங் கூடி யொருங்குடன் பட்ட
தெரிவுட னுணர்ந்தார் செப்பின ரென்ப”

என்பது அவிநயனார் கலாவியல்.

“சாதி நோக்கியும் தன்மை நோக்கியும்
வாத மழித்துரை யுரைப்போன் வாது
வென்ற நிலையினும் சென்றிடி லரைசின்
...........சிறப்புச் சிதைவே”

என்ற செய்யுள் வகைமையும் அறிக. (28)